அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை 1995/96 கல்வியாண்டு பயிற்சி ஆசிரியர்களினால் பெயர்ப்பலகை அன்பளிப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

ட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்த 1995/96 கல்வியாண்டில்
இருவருட பயிற்சி பெற்ற ஆசிரியர்களினால், புதிய கலாசாலை பெயர்ப்பலகை ஒன்று (30)
அன்பளிப்புச் செய்யப்பட்டது.


அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற நிகழ்வில், கடந்த
1995/96 கல்வியாண்டில் இருவருட பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் சார்பில்
அதன் தலைவர் சிரேஷ்ட ஆசிரியர் எம்.எம்.தாஜூடீன் தலைமையிலான நிர்வாகிகள்;,
புதிய பெயர்ப்பலகையை அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர்
ஏ.முகம்மது பைசாலிடம் கையளித்தனர்.


இந்நிகழ்வில், 1995/96 கல்வியாண்டு பயிற்சி ஆசிரியர்களின் செயலாளர்
சிரேஷ்ட ஆசிரியர் எம்.எஸ்.எம்.மொஹிடீன் மற்றும் ஏனைய நிர்வாகிகளான,
சிரேஷ்ட ஆசிரியர்கள் என்.ரி.முபாறக், ஏ.எல்.ஹாமிம், எம்.எச்.எம்.கியாஸ்,
கலாசாலை விடுதி அத்தியட்சகர் எம்.ஐ.இபாஸ் நபுக்கான் ஆகியோர் கலந்து
கொண்டனர்.


அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கடந்த 1995/96 கல்வியாண்டில்
இருவருட பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு, அட்டாளைச்சேனை
அரசினர் ஆசிரியர் கலாசாலையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிழ்வைத்
தொடர்ந்து, கலாசாலையின் பெயர்ப்பலகை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


குறித்த 1995/96 கல்வியாண்டில் இருவருட பயிற்சிபெற்ற ஆசிரியர்கள்,
நன்றியுணர்வுடன் கலாசாலைக்கு அழகிய பெயர்ப்பலகை அன்பளிப்புச்
செய்தமைக்காக, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் ஏ.முகம்மது
பைசால் நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -