கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் வெற்று சுவர்களையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம்

எம்.என்.எம்.அப்ராஸ்,
எஸ்.அஷ்ரப்கான்-

னாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய, வெற்று சுவர்களையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதற்கமைய கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால்(Kalmunai Undergraduate Association - KUA) கல்முனை பொலிஸ் நிலையத்தின் சுவர்களில் சுவோரோவியம் வரையப்பட்டு வருகின்றது இத்திட்டத்தின்
முதற்கட்டமாக வரையப்பட்ட முப்பரிமாண சுவோரோவியத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(24) மாலை பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

கல்முனை பொலில் நிலைய பொறுப்பாதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த அவர்களினால் சுவரோவியம்திறந்து வைக்கப்பட்டதுடன் இதன் போது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி ரம்சி பக்கீர் பொலிஸ் பரிசோதகர்களான என்.பி.விஜயரட்ன ,ஏ.எல் ஏ.வாஹிட், மற்றும் இளம் பட்டதாரிகள் அமைப்பனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் சுவரோவியத்தில்  இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முகமாக  மதஸ்தலங்களான விகாரை,கோவில்,பள்ளிவாசல்,
தேவாலயம் என்பன இதில் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -