அரசியலில் சமூகப்பபணி என்பது பல் வகையான வரை விலக்கணங்களோடு பல்வேறுபட்ட வாதபிரதி வாதங்களுக்கு மத்தியில் வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடாக இருந்தாலும், நிலையான அபிவிருத்தி எனும் பார்வையில் சமூகத்தின் அழியா சொத்தாக பார்க்கப்படும் கல்வியினுடைய உரிமைகளை பெற்றுகொடுத்தல் என்பதானது அரசியல்வாதி என்பவன் தனது சமூகத்துக்கு செய்யும் நிலையான அபிவிருத்தி என்பதற்கும் அப்பால் அவனுடைய அரசியல் வரலாற்றில் பின்னால் வருகின்ற தலைமைகள் தங்களுக்கு இவ்வாறு செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் ஓர் விடயமாகவே நான் பார்க்கின்றேன்.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் கல்வித்துறையில் தற்பொழுது இருப்பதை விடவும் பின்னடைவை நோக்கிய சமூகமாகவே இருந்து வந்தது. அதற்கு ஆசிரியர் பற்பற்றாக்குறை, ஆளணி பற்றக்காகுறை, சிறந்த நிருவாக கட்டமைப்பு இன்மை, கட்டங்கள்- தளபாடங்களின் போதாக்குறை, அரசியல் ரீதியாக உரிமைகளை வெண்றெடுப்பதற்காக சிறந்த தலைமைகள் சமூகத்திலிருந்து வெளிப்படாமை, சரியான ஒதுக்கிடுகள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு கிடைக்காமை போன்ற காரணங்கள் முக்கியமான விடயங்களாக பார்க்கப்பட்டு வந்தன.
இவ்வாறான காரணங்களை தூர நோக்கு சிந்தனையின்பால் சிந்திக்க தொடங்கிய கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலி மட்டக்களப்பு முஸ்லிகளுக்கான தனியான நிலத்தொடர்பட்ட கல்வி வலயத்தினை நிறுவுவதனூடாக மாடத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சந்ததியினரை சுய கெளரவத்துடன் கற்றறிந்த சமூகமாக மாற்றி அமைக்கலாம் என சிந்தித்தார்.
அந்த வகையில் அவருடைய சிந்தனையில் உருவான பிரதிபலிப்பே ஏறாவூரில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கான நிலத்தொடர்பற்ற் தனியான கல்வி வலையமாகும். காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என பிரதானமாக முஸ்லிம்கள் வாழும் பாரிய மூன்று நிலத்தொடர்பற்ற நிருவாக பிரதேசங்களை ஒன்றிணைத்து குறித்த கல்வி வலயானது பல வகையான அரசியல் குத்துவெட்டுக்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலும், அமீர் அலியின் விடாப்பிடியானதும், சாதுரியமானதுமான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது.
அதன் பிரதிபலிப்பே இன்று ஏறாவூர், கல்குடா, மற்றும் காத்தான்குடி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கலைப்பட்டதாரிகள், கணக்காளர்கள் என வீட்டுக்கு வீடு அறுவடைய செய்யக்கூடிய சமூகமாக மட்டக்களப்பு முஸ்லிம் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது. அந்த வகையில் இம்முறை இடம் கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்ச்சையின் பேருபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலையமானது அதிகளவிலான மாணவர்களை சித்தியடையவைத்து மட்டக்களப்பு முஸ்லிம் சமூகத்தின் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இம்முறை வெளியான பரீட்ச்சை முடிவுகளின்படி வைத்தியதுறைக்கு 13, பொறியியல் துறைக்கு 9 பொறியல் தொழிழ் நுட்பம் 15, உயிரியல் முறை தொழி நுட்பம் 11, கலைத்துறைக்கு 69, வர்த்தக துறைக்கு 52 அடங்களாக மொத்தமாக 169 மாணவர்கள் பலகலை கழகம் செல்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த மறு மலர்ச்சியானது மட்டக்களப்பு கல்வி வலையத்தின் சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுவதோடு, குறித்த கல்வி வலையம் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியினால் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான அறுவடையினை இன்று அடைந்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இன்னொரு பக்கத்திலே பல இன்னல்களுக்கு மத்தியில் தனக்கு கடந்த மஹிந்த ஆட்ச்சியில் மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரத்தினை தூர நோக்கு சமூக சிந்தனையுடன் சமூகத்துக்கான நிலையான அபிவிருத்தி எனும் உயரிய பார்வையில் நிலத்தொடர்பற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தினை உருவாக்கம் அமீர் அலியின் ஒரு இலட்ச்சியமாகவும் இருந்தது. இன்று அதன் அறுவடையின் சுவையினை மட்டக்களப்பு முஸ்லிம் சமூகம் அனுபவித்து வருகின்றது.
இந்த அறுவடையினை சமூகம் பெற்றுக்கொள்வதற்கு அடித்தளமிட்ட கல்குடாவின் அரசியல் தலைமையினை அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாலும் படித்த, பாமர சமூகம் என்ற வேறுபாடில்லாமலும் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் சமூகங்கள் பாராட்டுவது மட்டுமல்லாமல் மட்டக்களப்பு முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த வெற்றியாகவும் பார்க்கின்ற இடத்தில், அற்ப சொற்ப அரசியல் இலாபங்களுக்காகவும், காலத்துக்கு காலம் கல்குடாவிற்கு ஊடுருவும் அரசியல் விற்பனர்களின் ஏஜெண்டுகளுடைய திட்டமிடப்பட்ட கருத்து முரண்பாட்டு அரசியல் சேறுபூசல்களினால் கல்குடா சமூகத்தின் மனங்களில் இருந்து மட்டக்களப்பு கல்வி வலையத்தின் பெறுமானத்தை அழித்தொழிக்க நினைக்கின்றனர்.
ஆனால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வரலாறானது அமீர் அலியினுடைய சமூக சிந்தனையின் முதற்படியாக பார்க்கப்பட்ட வெற்றியுடன் ஏற்படுத்தப்பட்ட நிலையான அபிவிருந்த்தியாகும். நிலத்தொடர்பற்ற ஒரு விடையத்தினை எவ்வாறு கிழக்கில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் அதிகாரத்துடன் சாதுரியமாக சாதித்து காட்டுவது என்பதனை ஏனைய அரசியல் வாதிகளுக்கு முன்னுதாரணமாக செயற்படுத்திகாட்டி குறித்த கல்வி வலையத்தினை முஸ்லிம் சமூகத்தின் வெற்றெடுக்கப்பட்ட உரிமையாக அமீர் அலி ஏற்படுத்தினார் என்பதே உண்மை.
அதில் இருந்து எவ்வாறு ஏனைய அரியல்வாதிகளும், அவருடன் கருத்து முரண்பாடுகளை கொண்டவர்களும் பார்க்கின்றார்கள் என்பதற்கு அப்பால் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடியில் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு அது பெறும் அடித்தளமாக அமைந்துள்ளது என்பதே நடு நிலைவாதிகளினதும், இஹ்லாசுடன் சிந்திக்கும் சமூக சிந்தனையாளர்களினதும் கருத்தாக இருக்கும் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை.
இவ்வாறான சாதனைக்கு சொந்தக்காராணை எப்பொழுது கல்குடா சமூகம் ஒருமித்த குடையின் கீழ் அரசியல் கருத்து முரண்பாடுகளை தூக்கி எறிந்து விட்டு சிந்திப்பார்கள் என்பது ஒரு புரியாத புதுமையாகவே கல்குடாவில் இருந்து வருகின்றது. மேலும், கல்குடா சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கட்டாய தேவையில் இருக்கின்றது. அதற்காக நடு நிலை வாதிகளும், படித்த இளைஞர் சமூகமும் காலத்துக்குகாலம் கல்குடாவிற்குல் ஊடுறுவும் வெளியூர் அரசியல் விற்பனர்களின் ஏஜெண்டுகளின் மூலைச்சலவையில் இருந்து கல்குடாவில் வாழும் அப்பாவி முஸ்லிம் சமூகத்தினை தெளிவுபடுத்த வேண்டும் என்பது நான் கல்குடாவிற்கு சொல்லும் செய்தியாக உள்ளது.
