திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (28) உத்தரவிட்டார்.
திருகோணமலை,லைட் வீதி,நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த எச்.ஏ.சுதந்த காமினி வயது (51 )என்பவருக்கே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமையான சந்தேக நபர் நான்கு தடவைகளுக்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை திருகோணமலை ஆண்டாம் குளம் பகுதியில் தனது தங்கையின் வீட்டில் வைத்திருந்த நிலையிலே திருகோணமலை தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் என்பது மில்லிகிராம் ஹேரொயினுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.