தேசிய சமாதானப் பேரவை,சேவிஸ் கியுமெனட்டி பவுண்டேசன் (மனித நேயத்திற்கான அமைப்பு)ஆகியன இணைந்து மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் அமைப்பின் அங்குரார்பன நிகழ்வு இன்று(28) திருகோணமலை கிறீன்காடன் விடுதீயில் நடைபெற்றது.
மத சகவாழ்வு பன்மை மற்றும் நீதியின் ஆட்சியில் பல்லினம் மூலம் சகவாழ்வை ஏற்படுத்தல் எனும் திட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் பொலிஸ் அதிகாரிகள் சிவில் சமூக அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் சர்வமத தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கருத்துகளை மறிமாறிக் கொண்டார்கள்.
இதன் போது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரின் தலைமையின் கீழ் உள்ளூர் சர்வதேச குழு எனும் அமைப்பும் இதன் போது தெரிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை பட்டினமு சூழலும் பிரதேச செயலாளர் திரு.அருள்ராஜ்,சேவிங் ஹியூமனிட்டி பவுண்டேசன்(மனித நேயத்திற்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முகம்மது அன்சாரி,மற்றும்தேசிய சமாதான பேரவையின் திட்டப் முகாமையாளர் நிசாந்த குமார,திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் மகளீர் மற்றும் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜஸ்மீன் போன்றோரும் கலந்து கொண்டு சகவாழ்வு தொடர்பாக தெளிவுபடுத்தினார்கள்.