பிரபல விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் ஆக்கங்கள் பதிவிடப்பட்டுள்ளது.


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விக்கிபீடியா இணையதளம் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தன்னார்வமாக ஆயிரக்கணக்கானோர் இதில் ஆக்கங்களை பதிவிட்டு வருகின்றனர்
ஒருவர் பதிவிட்ட ஆக்கங்களை உலகின் எந்த நாட்டிலுள்ளவரும் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

உலகில் அதிகமாக பார்க்கப்படும் இணையதளங்கள் பட்டியலில் விக்கிபீடியா 10வது இடத்தில் உள்ளது. மேலும் 309 மொழிகளை இந்த தளம் ஆதரிக்கிறது. தமிழிலும் ஆயிரக்கணக்கான ஆக்கங்கள் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ளன. சுமார் 8 கோடியே 50 லட்சம் பயனர்கள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர். 19 வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த தளத்தில் விக்கிபீடியா தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2015ம் ஆண்டில் 50 லட்சம் ஆக்கங்களை எட்டியிருந்த நிலையிலேயே தற்போது 60 லட்சத்தை எட்டியுள்ளது.
அதாவது விக்கிபீடியா இணையதளத்தில் இதுவரை 60 லட்சம் ஆங்கிலக் கட்டுரைகள் பதிவிடப்பட்டுள்ளது.  மனிதர்கள் ஒன்றிணைந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று விக்கிபீடியாவின் CEO ரையான் மெர்க்லே தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஜெர்மன் மொழியில் 23 லட்சம் ஆக்கங்களும், பிரெஞ்ச் மொழியில் 21 லட்சம் ஆக்கங்களும் பதிவிடப்பட்டுள்ளன தமிழ் மொழியை பொறுத்தவரை சில ஆயிரமாகவே இது உள்ளது. எனவே தமிழில் எழுதும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த தலைப்புகளில் ஆக்கங்களை எழுதி விக்கிபீடியாவில் பதிவிடலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -