விளையாட்டு மாணவிகளுக்கு மிகச் சிறந்த பயிற்சிக் களம் - பைஸர் முஸ்தபா கைரிய்யாவில் உரை

மினுவாங்கொடை நிருபர்-
கொழும்பு - 09, தெமட்டகொடை, கைரிய்யா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், கல்லூரி அதிபர் திருமதி ஏ.எல்.எஸ். நஸீரா ஹஸனார் தலைமையில், கொழும்பு சுகததாஸ விளையாட்டுத் திடலில் (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதில், ஹம்ரா இல்லம் (சிவப்பு) 325 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவாகி, 2020 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இரண்டாம் இடத்திற்கு ரவ்தா இல்லம் (ஆரஞ்சு) 310 புள்ளிகளையும், மூன்றாம் இடத்திற்கு வர்தா இல்லம் (ஊதா) 290 புள்ளிகளையும், நான்காம் இடத்திற்கு ஸர்கா இல்லம் (நீலம்) 280 புள்ளிகளையும் பெற்று, முறையே வெற்றிக் கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டன.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவிகளுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார். அவர் மாணவிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார்.
மாணவிகள், விளையாட்டின் மூலம் தமது திறமைகளை எப்பொழுதும் வெளிக்கொணர வேண்டும். கல்வியில் ஊக்கம் எடுப்பதைப் போன்று, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் எடுக்க வேண்டும். கல்வி, விளையாட்டு இரண்டும் நம்மத்தியில் இருந்தால் நமது அறிவு, ஆரோக்கியம் இரண்டும் உச்ச நிலையில் மேன்மை பெறும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டு, மாணவிகளுக்கு மிகச்சிறந்த ஒளடதமும் பயிற்சிக் களமுமாகும். அத்துடன், விளையாட்டின் மூலம் நமது தேகாரோக்கியமும் வலுவடைகிறது. இதேபோல், நமது உடம்பிற்கும் சிறந்த சக்தியைக் கொடுக்கிறது. குறிப்பாக, விளையாட்டு நமது வாழ்க்கையோடு எப்பொழுதும் பிண்ணிப் பிணைந்ததாக இருக்க வேண்டும். இன்று நிறையவே மாணவிகள், தமது திறமைகளை வெளிக்காட்டினார்கள். இம்மாணவிகள் கல்வியிலும் விளையாட்டிலும் மிகத்திறமையானவர்களாக வலம்வந்து, எதிர்காலத்தில் நாட்டின் நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -