கொழும்பு மருதானை அல்கிதாயா பாடசாலையின் பழைய மாணவா்கள் சங்கத்தின் 35 வருடபூர்த்தியும் ”கிதாயன் நைட்” அப்பாடசாலையின் அபிவிருத்திக்கு பழைய மாணவா்கள் நிதி சேகரிக்கும் நிகழ்வும் அல் கிதாய அபிவிருத்திச் சங்கத்தின் தலைவா் கலாநிதி எம்.சி. பகாா்தீன் தலைமையில் கொழும்பு சினமன்ட் கிராண்ட் கோட்டலில் நடைபெற்றது.
இங்கு பிரதான உரையை கல்லுாாியின் அதிபா் எம்.என்.எம் நிகாா் உரையாற்றினாா் இக் கல்லுாாிக்கு பழைய மாணவா் அமைப்பு மிகவும் ஒரு உந்த சகத்தியாக அமைந்து இக் கல்லுாாியின் பௌதீக மற்றும் அபிவிருத்திகளுக்கு பாரிய சக்தியாக கைகொடுத்து வருகின்றது.. இக் கல்லுாாி கடந்த 90 வருடங்களை கடந்து வந்துள்ளது. இக் கல்லுாாியின் பழைய மாணவா் சங்கத் தலைவா் பகாா்தீன் கூட்ட மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளாா். அத்துடன் கைப்பந்தாட்டு பயிற்சி மைதானம், வாகனங்கள் தரிப்பிடம், 1800க்கும் மேற்பட்ட பழைய மாணவா்களை ஒன்று சோ்த்து வாகண பேரணி, மீண்டும் பாடசாலை செல்வோம், மனைவியல் ஆய்வு கூடம், விஞ்ஞான ஆய்வு கூடம் போன்ற அபிவிருத்திகளை பழைய மாணவா்கள் சங்கமே அமைத்துக் கொடுத்துள்ளதாக தெரிவித்தாா். தற்பொழுது இப் பாடசாலை தனியான பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது. இம்முறை 6 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளதாகவும் அதிபா் நிகாா் அங்கு உரையாற்றினாா்.
பழைய மாணவா்கள் ஒன்று கூடி இக் கல்லுாாியின் மாணவர்களுக்கான வகுப்பறைகள், இடவசதிகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனா். அத்துடன் பழையமாணவா் அமைப்பின் உறுப்பிணா் ஒருவா் கட்டாா் நாட்டில் இருந்து பழைய மாணவா்களது உதைப்பந்தாட்ட அணிக்கான டீசேட், பந்துகள் மற்றும் பயிற்சிகளுக்கும் அனுசரனை வழங்கியிருந்தனா். அத்துடன் பழைய மாணவரான அலி பிரதா்ஸ் சகல வகுப்பறைகளையும் புனா் நிர்மாணிப்பதற்கு சீமெந்துகளை வழங்குவதாகவும் மேலும் ஒரு உறுப்பிணா் 1 மில்லியன் ருபாவையும் பாடசாலை அபிவிருத்திகளுக்கு அன்பளிப்புச் செய்ய வாக்குறுதியளித்தனா் அத்துடன் பழைய மாணவா் தலைவா் எம்.சி பகாா்தீன் நிகழ்வில் வெளியிடப்பட்ட ஒரே ஒரு டீ சேட்டினை ஏலத்தில் விடப்பட்டு 3 இலட்சம் ருபாவை வழங்கி பழையமாணவா் 35 வருட ஞாபாகாா்த்த டீ சோட்டினைப் பெற்றுக் கொண்டாா். சுமாா் 3 மில்லியன் ருபா பாடசலை அபிவிருத்திக்கென பழைய மாணவா்கள் நலன் விரும்பிகள் அன்பளிப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.




