போடிங் பாஸ் எடுத்து விமாத்திற்குள் ஏறுவதற்கு பதில் 4ஆம் மாடிக்கு ஏறிய ஊடகவியலாளரின் மனு விசாரணைக்கு...

அஸ்ரப் ஏ சமத்-

ரச தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (2020.01.24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்படுத்தி கடந்த வருடம் மே மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த ஊடகவியலாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 

எந்தவித அடிப்படை காரணங்களுமின்றி கைதுசெய்யப்பட்டதாகவும் இந்தக்கைது சட்டவிரோதமானதெனக்குறிப்பிட்டும் குறித்த ஊடகவியலாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தார். இம்மனு தொடர்பான விசாரணையை இன்று (2020.01.24) உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜயன்த ஜயசூரிய, நீதியரசர்களான P. பத்மன் சூரசேன, L.T.B. தெஹிதெனிய ஆகிய மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் முதல்முறையாக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

நெதர்லாந்து அரசு வழங்கிய *புலனாய்வு செய்தி அறிக்கையிடல்* பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள முற்பட்ட போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 55 நாடுகள் விண்ணப்பித்து 6 நாடுகளே இம்முறை தெரிவாகியிருந்ததோடு இலங்கையிலிருந்து குறித்த ஊடகவியலாளர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டு முழுமையான புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது. நெதர்லாந்தை நோக்கிப்புறப்பட மே மாதம் 11ஆம் திகதி நள்ளிரவு விமான நிலையம் சென்று போடிங் பாஸ் எடுத்து பயணப்பொதிகள் விமானத்திற்குள் சென்றதன் பின்னர் இவர் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இது ஒரு சட்டவிரோத கைது எனவும்
இதற்கு நட்ட ஈடாக ஐந்து மில்லியன் ரூபா வழங்குமாறும் மனு ஊடாக இவர் கோரியுள்ளார்.

குறித்த மனுவில் 10 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருப்பதோடு இன்றைய விசாரணையில் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன. அரச தொலைக்காட்சி ஊடகவிலாளருடைய இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை முன்னெடுத்துச்செல்ல சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவருமான சாலிய பீரிஸ் வாதி சார்பில் ஆஜராகியிருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் வரலாற்றில் முதல் தடவையாக கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவில் வருடத்திற்கான சிறந்த செய்தி அறிக்கையிடுலுக்குறிய ஜனாதிபதி விருதை பெற்றுக்கொண்டது மாத்திரமன்றி சிறந்த புலனாய்வு தொலைக்காட்சி செய்தி அறிக்கையிடலுக்கான சமூக காணொளிக்குறிய சிறப்பு விருதுதொன்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -