திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்.



எப் முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாலொன்று புதன் கிழமை (4) கந்தளாய் பேராறு பகுதியில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
ஐனாதிபதி தேர்தலின் பிற்பாடு எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது தொடர்பாக கந்தளாயின் கட்சி முக்கியஸ்தகர்களுக்கிடையில் கருத்துகளும் பரிமாறப்பட்டன.
இதன் போது பாராளுமன்ற இம்ரான் மஹ்ரூப் உறுப்பினர் பேசும் போது :
இம்மாவட்டத்தின் எனது தந்தை அமைச்சராக இருக்கும் போது பல்வேறு முன்னுதாரன செயற்பாடுகளையும்,அபிவிருத்திகளையும் மேற்கொண்டுள்ளார்.
அவரின் விட்டுச் சென்ற பணிகளை முடிவுறுத்தி வந்து இறுதிக் கட்டத்தில் உள்ளேன்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் திருகோணமலை தொகுதிகள் கடத்த பத்து வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக காணப்பட்டது.
தற்போதும் இருக்கின்றது கட்சியை புனரமைப்புதுப் பொழியுடன் சென்றால் மக்கள் பிரதி நிதிகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரண்டு பாராளுமன்ற பிரதி நிதிகளையாவது ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -