கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடையைச் சேர்ந்த மீராசாஹிபு ஈஸா லெவ்வை என்பவருக்கு முது கலைஞர் விருது கிடைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தம் வாழ்நாளில் கலை இலக்கியத்துறையில் முத்திரை பதித்த ஈஸா லெவ்வைக்கு கிராமிய கலைத்துறைக்கு ஆற்றிய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக 2019 ம் ஆண்டுக்கான முது கலைஞர் விருது வெள்ளிக்கிழமை (29) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விருதினைப் பெற்றுக்கொண்ட ஈஸா லெவ்வை என்பவர் மீராவோடைப் பிரதேசத்தில் தீப்பந்தம் எறிதல், சிலம்பு விளையாட்டு, கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளில் பிரபல்யமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.