கலாநிதி கோபாலரெத்தினத்தின் தாயார் காலமானார்.

காரைதீவு நிருபர் சகா-

லாநிதி எம்.கோபாலரெத்தினம் (பிரதி பணிப்பாளர் நாயகம் முகாமைத்துசேவைகள்பிரிவு திறைசேரி கொழும்பு ) அவர்களின் தாயார் திருமதி மூத்ததம்பி செல்லம்மா இன்று (18)புதன்கிழமை தனது 88ஆவது வயதில் காலமானார்.

மட்டு. செட்டிபாளையத்தைச்சேர்ந்த அமரர் திருமதி செல்லமாவுக்கு 10பிள்ளைகள் 100க்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகள் உண்டு.

அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை (19) வியாழக்கிழமை காலை 10.மணிக்கு செட்டிபாளையம் இந்து மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இலங்கை நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரியான கலாநிதி கோபாலரெத்தினம் ஏலவே நாவிதன்வெளி திருக்கோவில் களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் பிரதேச செயலாளராகக்கடமையாற்றி பொதுமக்களின் நன்மதிப்பைப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -