இதில் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள் மட்டுமல்லாமல் குவைத் நாட்டு சகோதரர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர். இரத்த வங்கி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டு தமிழ் பேசும் மக்களின் உயிர்காக்கும் இந்த மனித நேய பணியை பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முகாமில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 70க்கும் அதிகமானோர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ்கள், பழங்கள், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்' என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி, முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் என்பதால் இந்தப் பணியை பதினைந்து வருடங்களாக தொடர்ந்து செய்து வருவதாக கூறினர்.
இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர். வருகை தந்தவர்களுக்கு பகலுணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டன.