சிரேஷ்ட ஊடகவியலாளர்
எம்.எம்.நிலாமுடீன் -
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சாணக்கியம் ஹக்கீம் போட்டியிடுவதை கண்டி மாவட்ட முஸ்லிம்கள் விரும்பவில்லையாம்.காரணம் எங்களது வீடுகள்.,சொத்துக்கள் இனிமேலும் அழிக்கப்படுவதை விரும்பவில்லையாம்.
அதனால் ஹக்கீம். யானைச் சின்னத்தில் அல்லது மரச்சின்னத்தில் போட்டியிட வர வேண்டாம் என்று பெருமளவு முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள்.
மொட்டு சின்னத்தில் ஹக்கீம் வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு என்று முஸ்லிம்கள் மக்கள் பார்க்கின்றார்கள்.
இதேவேளை UNP ரணில் அணியானது ஹக்கீம், றிசாத் அணியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட விரும்பாது.
காரணம் இரண்டு முஸ்லிம் அணியையும் பிரபாகரன் ரேஞ்சுக்கு சிங்கள மக்கள் பார்க்கின்றார்கள்.அதனால் இந்த இருவரையும் சேர்த்துக் கொண்டு களமிறங்கினால் சிங்களக் கல்லடி வாங்க வேண்டும்.
அதனால் இந்த இரண்டு முஸ்லிம் வியாபார அணிகளையும் கழட்டி விட்டு ரணில் அணி களமிறங்க முடிவு.
ரணில் ஒரு போதும் கட்சியை தலைமை பதவியை,எதிர்கட்சி தலைமை பதவியை விடுவதாக இல்லை. அதனால் சஜித் தனிக்கட்சி அமைத்து ஐ.தே.க.வை விட்டு தனி வழியில் செல்லலாம்.
மயிலு மயிலு மயிலம்மா
மல்லுக் கட்டலாமா....
அதனால் ஹக்கீம் றிசாத் இருவரும் இணைந்து மரமும் மயிலும் ஒரு ஒப்பந்தம் போட்டு மரச்சின்னம் அல்லது பொதுச்சின்னத்தில் களமிறங்குவது.
ஆனால் இந்த சத்தியம் சாணக்கியம் இருவரும் சிங்கள பகுதியில் அரசியல் செய்ய முடியுமா???
ஆக வடக்கு கிழக்கில் மட்டும்தான் அரசியல் செய்யலாம்.
இருவரும் இணைந்து சிங்களக் கட்சிகளின் துணை இல்லாமல் தன்னந்தனியாக களமிறங்கப் போறாங்க.
UNP ஆட்சியமைக்கும் நிலை வந்தால் ஹக்கீம் றிஷாட் அணியை சேர்த்துக் கொள்வது..
ஹக்கீம் அட்டாளைச்சேனையை மைய்யமாக வைத்து அம்பாரையில் களமிறங்க மிக அதிக வாய்ப்பு.
அப்போ அட்டாளைச்சேனைக்கு MP கோவிந்தாவா.???
ஹக்கீமும் சம்மாந்துறை மன்சூர் மட்டுமே வெற்றி பெற முடியும்.
தொடரும்.
