இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கனடாவில் உள்ள சர்ரே பகுதியில் இருக்கும் வீடு ஒன்றின் அறையில் இரண்டு மாணவிகள் சடலமாக கிடந்தனர். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இருவரும் யார் என்ற தகவல் தெரியாமல் இருந்தது.
இச்சம்பவம் குறித்து விசாரித்த பொலிசார் அதில் ஒருவர் இந்திய மாணவி என உறுதி செய்தனர். இதனை அடுத்து இந்தியாவிலிருந்த பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த இந்திய மாணவியின் பெற்றோர், நேற்று காலை கனடாவிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் கனடா பொலிஸ் பேசுவதாக குறிப்பிட்டனர். மேலும் எங்களுக்கு ஒரு சோகமான செய்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அதாவது உங்களது மகள் கொலை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து தொலைபேசியை துண்டித்தனர். எங்களுக்கு வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறினர்.
உயிரிழந்த இந்திய மாணவி பிரப்லின் 2016 ஆம் ஆண்டு முதல் கனடாவில் கல்வி கற்று வந்தது குறிப்பிடத்தக்கது.ஐபிசி
