தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்-அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன்


பாறுக் ஷிஹான்-
மிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்.கூட்டமைப்பின் தலைவராக வருகின்றவர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
கல்முனையில் சனிக்கிழமை(2) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ் லோகநாதன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களிலும் நூற்றுக்கு 70 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக உள்ளது மற்றும் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக வருவதற்கு நாங்கள் எங்களுடைய ஆதரவு தெரிவிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்க தீர்மானம் எடுத்ததற்கான நோக்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மதவாதம் இனவாதம் ஆயுத கலாச்சாரம் என்பனவற்றை உருவாக்கினார் ஆகவேதான் சிறுபான்மை மக்களுக்கு சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலேயே விமோசனம் கிடைக்கும் .
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் நாங்கள் வட கிழக்கு இணைப்பை வழியுறுத்துவதோடு, அதிகார பகிர்வையும் எதிர்பார்த்து தான் நாங்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதில் நாங்கள் முழுதாக பாடுபட்டவர்கள், ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்தும் எந்த விதமான உதவிகளையும் சிறுபான்மை மக்களுக்கு செய்யவில்லை, மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளையும் இவர் ஏற்கவில்லை .
எங்களது தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புக்கள் என்பன அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றது இதற்கு முழுக்காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும். 20 வருட அரசியலில் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பின் தலைவராக வருகின்றவர் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தான் நாங்கள் பயணிப்போம், திருகோணமலையில் சுமந்திரன் ஐயா அவர்கள் உரையாற்றும் போது விமர்சிப்பவர்கள் தலைமைதுவத்திற்கு வாருங்கள் என்றார். இன்று நான் கூறுகின்றேன் கூட்டமைப்பின் தலைமையை நான் பொறுப்பேற்க தயாராக உள்ளேன். இவர்களை விட மக்களின் துன்பம், துயரம் என்பன எமக்கு நன்றாக தெரியும். அத்தோடு 40 வருட காலமாக நாங்கள் அரச நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றோம். ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் வேட்பாளரை தெரிவு செய்யும் போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -