சனிடேஷன் பேட் சர்ச்சை


ர் இரு நாட்களாக முகப்புத்தகத்தில் சனிடேஷன் பேட் சம்பந்தமான கேலிக்கூத்க்களை காணக்கூடியதாக உள்ளது. உண்மையில் இது சம்பந்தமாக விமர்சிப்பவர்கள் இதுபற்றி எந்த அறிவற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள், சனிடேஷன் பேட் சம்மந்தமான சுகாதார சீர்கேடுகள் இலங்கையில் எந்தளவு இருக்கின்றது என்பதை அறியாதவர்களே இப்படியான அரசியல் குறுகிய நோக்கத்தோடு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகள் பெண்களுக்கான சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. பெண்களின் மாதவிடாய் கால நேரத்தில் பெண்கள் உரிய சுகாதார முறையை கையாளாமல் இருப்பதால் அவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு முன் கொடுக்கின்றார்கள்.
இலங்கையிலுள்ள 4.2 மில்லியன் பெண்களில் 30 வீதமானோர் மட்டுமே சுகாதார அடிப்படையான சனிடேஷன் பேடை Menstrual காலத்தில் இதுவரை பாவித்து வருகின்றார்கள்.
ஒரு நபருக்கான, ஒரு வருடத்திற்கு இதற்கான செலவு ஒரு சராசரி குடும்பத்தில் இருமாத அரிசியை கொள்வனவு செய்வதற்கான செலவிற்கு ஒத்ததாகும். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கும் சமயத்தில் இன்னும் பல மடங்காக மாறுகிறது.
இதற்கு அப்பால் மிக முக்கியமான விடயமாக, சுகாதாரமற்ற பாவனையால் பெண்கள் பல நோய்களால் ஆட் கொள்ளப்படுகிறார்கள். சிறுநீர் தொற்று நோய்கள், கர்ப்பப்பை தொடர்பான புற்றுநோய்கள்(Cervical Cancer) நிரந்தர சிறுநீரக பாதிப்புகள், இலங்கையில் மட்டும் ஒரு வருடத்திற்கு 1750க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 650 மேற்பட்டோர் மரணமடைகிறார்கள்.
மற்றும் சுகாதாரமற்ற சனிடேஷன் பேட் பாவனையானது பெண்களின் கல்வி நிலை நிலைமையிலும் ஊழியர் வலுவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
23 வீதம் தொடக்கம் 40 வீதம் வரை மாணவர்கள் இதனடிப்படையில் 1.3 மில்லியன் பாடசாலை நாட்களை தவறிவிடுகிறார்கள். இது பெண்களின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
சஜித் பிரேமதாச அவர்களின் அவர்களினால் முன்மொழியப்பட்ட பெண்களின் menstrual சம்பந்தமான சுகாதாரத்தோடு கூடிய தீர்வை பெற்றுக் கொள்வது சம்பந்தமான அவரது கரிசனை பாராட்டத்தக்கது. நகர்ப்புறங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைக்கொண்ட குடும்பத்தினருக்கும், கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் அவர்களின் கரிசனையின் பெறுமதியை  புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வெறுமனே கொமிசன்களுக்காக மெழுகுபுசப்பட்ட காபட் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு, அடிமட்ட மக்களின் சுகாதார பிரச்சினைகள் கேலிக்கையாகத் தான் தெரியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -