தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளியலாளர்களின் 31 வது ஒன்றுகூடல் மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்!

சலீம் றமீஸ், எம்.வை. அமீர்-
லங்கை பல்கலைக்கழகங்களின் பொருளியலாளர்களின் 31 ஆம் ஒன்றுகூடல் மாநாடு தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் அதன் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட கேட்போர் கூடத்தில் கலை, கலாசார பீட பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் துறைத் தலைவர் கலாநிதி ஏ.ஏ.எம்.. நுபைல் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளானது பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் வழிகாட்டலுடன் 31 ஆம் ஒன்றுகூடல் மாநாட்டின் இணைப்பாளரான தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீட வியாபார பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா ஆகியவர்களோடு துறைசார் அங்கத்தவர்களின் உதவியுடனும் நடைபெற்றமையானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கலாச்சார விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை அறிமுகம் செய்யும் பொருட்டு காணொளியொன்று முன்வைக்கப்பட்டது.
பல்கலைக்கழக கலை கலாசார பீட பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறைத்தலைவர் கலாநிதி ஏ.ஏ.எம். நுபைல் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு அதனைத் தொடர்ந்து சிங்கள கலாசார நடனம், முஸ்லிம் கலாசார நடனம், இந்து கலாசார நடனம் ஆகியன மிகவும் அழகாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தலைவர் கலாநிதி ஏ. ரமீஸ் உரையாற்றியதைத் தொடர்ந்து இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்களின் ஒன்றுகூடல் மாநாட்டின் கூட்டத்தலைவர் கலாநிதி ஆர்.ஏ. ரத்னசிறி உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களும் உரையாற்றினார்.
இச்சொற்பொழிவுகளையடுத்து இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை இறுதி வருட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆய்வுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆய்வுகளின் சுருக்கம் கொண்ட புத்தக வெளியீட்டு நிகழ்வுவோடு முகாமைத்துவ வர்த்தக பீட வியாபார பொருளியல் துறையினால் வெளியிடப்பட்ட வியாபார பொருளியல் சஞ்சிகையொன்று மென்பொருள் வடிவில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அதன் கையேடும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இதில் கலந்து கொண்ட முக்கியஸ்தரகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து முக்கிய உரையாற்றாளரான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி. பிரசன்னாவினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை விரிவுரையாளர் எம்.என்.எப். வஸீமா அறிமுகம் செய்து வைத்ததோடு இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி. பிரசன்னா அவர்கள் உரையை நிகழ்த்தியமையானது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது உரையானது ஆய்வு ரீதியானதொரு உரையாகக் காணப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும். அதன் பின்பு கலந்துரையாடல் மற்றும் வினா எழுப்பல் விடையளித்தலோடு அதனைத் தொடர்ந்து நன்றியுரையானது 31 ஆம் ஒன்றுகூடல் மாநாட்டின் இணைப்பாளரான முகாமைத்துவ வர்த்தக பீட வியாபார பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்களின் ஒன்றுகூடல் மாநாடானது இலங்கையினுடைய தேசிய பல்கலைக்கழக துறைகளின் ஒன்றிணைந்த முயற்சியை குறித்து நிற்கின்ற அம்சமாகும். இவ்வலைப்பின்னலானது எல்லா பொருளியல் துறைகளையும் அலகுகளையும் அத்தோடு பொருளியல் சார் அனைத்து துறைகளினையும் உள்ளடக்கிய ஒரு மாநாட்டு நிகழ்வாகும். இவ் ஒன்று கூடல் மாநாட்டின் பிரதான நோக்கமானது இலங்கை பல்கலைக்கழகங்களிடையே பொருளியல் பரிமாற்றத்தின் தொழில்முறைகளுக்கேற்ப ஒன்றிணைப்பு, உரையாடல், ஆய்வு மற்றும் கல்வி சார் விரிவாக்கம் என்பவற்றினை ஏற்படுத்தும் பொருட்டு இயங்கும் ஒரு மாநாட்டு நிகழ்வாகும். இதன் 30 ஆவது நிகழ்வானது ருஹூணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதனையடுத்து 31 ஆம் கூட்டத்தொடருக்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இலங்கையின் ஒவ்வோர் பல்கலைக்கழகத்தினதும் வௌ;வேறு பீடங்களின் பொருளியலாளர்களை ஒன்றிணைப்பதுவே நோக்கமாக கொண்டு காணப்படுவதால் இம்மாநாட்டினது எல்லா பல்கலைக்கழகங்களினையும் ஒன்றிணைத்ததாக ஏற்பாடு செய்யப்பட்டது. 8 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடானது வயம்ப பல்கலைக்கழகத்திலும் 9 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் நடாத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தகு நோக்கத்தினையுடைய 31 ஆம் ஒன்றுகூடல் மாநாட்டினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீட வியாபார பொருளியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்கின்றமையானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் கலந்து கொண்டார். இவருடன் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பீடாதிபதிகளான கலாநிதி ஏ.றமீஸ், எஸ்.குனபாலன், இலங்கை பல்கலைக்கழகங்களின் பொருளியலாளர் மன்றத்தின் தலைவர் கலாநிதி ஆர்.ஏ. ரத்னசிறி, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரசியர்களான ரி. லலிதாசிறி குணருவான், அதுல ரணசிங்க, ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஆர்.பி.ஐ.ஆர்.பிரசன்ன உட்பட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -