சஜித் மற்றும் வேட்பாளா்கள் இன்று காலை கோல்பேஸ் கோட்டலில் நடாத்திய கேள்வி பதில்





அஸ்ரப் ஏ சமத்-

லங்கையின் சம்பர் ஓப் கொமஸ் சர்வதேச வியாபார அமைப்பினா் இலங்கையில் போட்டியிட உள்ள ஜனாதிபதி வேட்பாளா்களை அழைத்து அவா்களிடம் இலங்கையின் பொருளாதாரம் திட்டமிடல் வெளிநாட்டு வியாபாரக் கொள்கை உள்நாட்டு வெளிநாட்டு உற்பத்தி. சுற்றுலாத்துறை வெளிநாட்டுக் கடன்கள், முதலீடுகள் இலங்கையில் நிலையான நிதிக் கொள்கைகள். இலங்கையில் இந்தியா, சீனா போன்ற நாடுகள்் இலங்கையில் மேற்கொள்கின்ற அபிவிருத்தித் ்திட்டங்கள் இலங்கையின் வாழ்வதாரத்தினை மேம்படுத்துதல் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன.
இந் நிகழ்வு இன்று 7.11.2019 காலை கோல்பேஸ் கோட்டலில் நடைபெற்றது.

ஜனாதி வேட்பாளா்கள் சஜித்பிரேமதாச , அநுரகுமார திசாநாயக்க மற்றும் மேலும் இரு சுயாதீன வேட்பாளா்களும் கலந்து கொண்டு அவாகள் எதிா்காலத்தில் தாம் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னா் தாம் நடைமுறைப்படுத்தவுள்ள பொருளாதார கொள்கைத் திட்டங்கள் பற்றிய கருத்துக்களை சர்வதேச வியாபார சமுகத்தினரிடம் முன்வைத்தனா்.

இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ச சமுகமளித்திருக்கவில்லை

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்

வெளிநாட்டுக் கடன் பெறுவதற்கு ஒரு நிலையான திட்டம் ஒன்று வகுக்ப்படும். அத்துறை சாா்ந்தவா்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு ஆசியாவிலே ஒரு சிறந்த வா்த்தக மையமாக இலங்கையை கொழும்பு தளமாக மாற்றுவதற்கு தனது பதவிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த நாட்டில் உள்ளுர் வெளிநாட்டு வா்த்தகா்களின் தலையில் அள்ளிக் கொட்டப்பட்டுள்ள வரிச்சுமைகள் ஒரு சாதாரண அளவுக்கு குறைக்கப்படும்.

நாட்டில் கிராமியப்பொருளாதாரத்தினை மேம்படுத்த பிரதேச மட்டத்தில் வர்த்தக பேட்டைகள் தொழிற்சாலைகள் திறக்கப்படும் அப்பிரதேசித்தில் வாழ் இளைஞா் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற வாய்பளிக்கப்படும். சிறந்த பொருளாதார திட்டமொன்றும் வகுக்ப்பட்டு இலங்கை உற்பத்தியாளா்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்க்பபடும். சுற்றுலாத்துறை கொழும்பில் மட்டுமல்லாது இலங்கையின் நாலா பாகத்திலும் அதனை விரிவுபடுத்தல், உள்ளுர் விமான நிலையங்கள் விரிவுபடுத்தல் போன்ற அபிவிருத்திகள் எனது காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தாா். இந்த நாட்டில் சகல சமுகங்களும் சமாதானமாக வாழ்ந்து உலகில் உள்ள ஏனைய நாட்டவா்கள் அச்சமின்றி வந்து போவதற்கான சா்ந்தா்ப்பம் ஏற்படுத்தப்படும் என சஜித்் பிரேமதாச அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தாா்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -