நான் ஜனாதிபதியானதும் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுபவரை புதிய பிரதமராக நியமிப்பதாகவும் ஊழல் களங்கமில்லாத அமைச்சர்களை நியமிப்பதாகவும் சஜித் பிரேமதாச தனது விசேட உரையில் உறுதியளித்தார்.
மேலும் புதிய அமைச்சரவையில் திறமையுள்ள இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் சிபாரிசில் ஒருவரும் அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் புதிய அரசியலமைப்பு செயற்படுத்தப்படமாட்டாது என்றும் நாட்டிற்கு பொருத்தமான அரசியலமைப்பை கொண்டுவர நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் செயற்பட்டு, மக்களின் கருத்தறிந்து செயற்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -