ஊழல் அற்ற தலைவரால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்-பாரளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி



எம்.என்.எம்.அப்ராஸ்-
க்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளருமான அனுர குமார திசாநாயக்க ஆதரித்து மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக விளக்கமளிக்கும்
கலந்துரையாடலொன்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இன்று (03/11/2019) இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அங்கு மேலும் உரையாற்றுகையில்
நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம் இந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம். இந்த வாக்குறுதியை வழங்குவது ஊழல் அற்ற தலைவரால் மாத்திரமே முடியும் . நாட்டின் பாதுகாப்பையும் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.
நாங்கள் மக்களிடம் கேட்க்கிறோம் தேர்தல் இல்லாத காலங்களில் உங்கள் மனதில் உள்ள உங்களுக்கு விருப்பமான கட்சி எது?விவசாயிகளின் ,மீனவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுகின்ற கட்சி என்றால் மக்கள் விடுதலை முன்னணியே இந்த நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அனுர குமார திஸ்ஸா நாயக்கவை ஆதரியுங்கள் என்றார்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -