ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சாரக் கூட்டமொன்று மாளிகைக்காட்டில் (31) இடம்பெற்றது காரைதீவு பிரதேச சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதன் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்
ஒரு குடையின் கீழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்துள்ள சந்தர்ப்பத்தில் நாங்கள் எல்லோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியபலப்படுத்துவதன் மூலமே ஒற்றுமையாக பயணிக்கலாம் .
ஜனாதிபதி வேடப்பாளர் சஜித் பிரமதாஸவின் தெரிவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வகிபாகம் அளப்பரியதாக காணப்பட்டது.
1994 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு செல்வாக்கு மிக்கதாய் வகிபாகம் கிடைத்ததோ அதே போன்று கிடைக்க வேண்டுமென்றால் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேடப்பாளர்கள் சஜித் பிரமதாசாவை வெல்ல வைப்பதன் மூலம் அதனை நாம் நிலை நாட்டலாம்.
சிலர் மக்களை பூச்சாண்டி காட்டி பிழையாக வழி நடாத்துகின்றனர்.
ஒற்றுமையே எமது சமுகத்தின் பலமாகும்.ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடிப்பதன் மூலமே எமது சமுகத்தின் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். பல கட்சிகளில் பிரிந்து செல்வதன் மூலம் தான் சமுகத்தின் உரிமைகளை பெறலாம் என்று சிலர் கூறிக் கொண்டு இருக்கிறார்கள் .
இவர்களின் சுயநலம், அச்சம் மற்றும் இந்த கோழைத்தனமான
செயற்பாட்டிற்க்கு நான் சவால் விடுகிறேன்.இந்த சமூகம் கோழைத்தனமான வெறும் பூச்சாண்டிகளுக்கு அடிபணிவர்கள் அல்ல
நாங்கள் ஒற்றுமையாக நின்று எமது பலத்தை காண்பிப்பதன் மூலமே
ஏனையவர்களுக்கு முன்மாதிரியை காட்டினோம் .
கடந்த காலத்தில் றிசாட் பதீயுதின் ,ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி ஆகியோர் மீது சிலர் பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்தனர் இதன் போது
எமது ஒற்றுமையை காட்டினோம் என்றார்.
இதன் போது கிழக்கு மாகாண சபைமுன்னாள் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.ஏ.பஸீர் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிசார் ஜே .பி , மற்றும் பொது மக்கள் கட்சியின் போராளிகள், பலர் கலந்து கொண்டனர்.