மாளிகைக்காடு 01ம் வட்டாரத்தில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவும்,கருத்தரங்கும்..

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் வட்டார தேர்தல் காரியாலயம் காரைதீவு பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் வட்டார செயற்குழு தலைவருமான எம்.எச் நாஸர் தலைமையில் இன்று(6) மாளிகைக்காடு வட்டார காரியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சிகள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினரும் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்,எம்.ஐ மாஹிர்,மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. இஸ்மாயில்,முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ பாவா மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -