தமிழ், சிங்கள மக்களிடத்தில் வெவ்வேறு கதைகளைச் சொல்லி இனவாதத்தை உண்டுபண்ண பார்க்கின்றார்கள் - வாழைச்சேனையில் பிரதமர் ரணில்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
னவாதத்திற்கு பதிலாக நாங்கள் நல்லாட்சியைக் கொண்டு வந்தோம் அதேபோன்று சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்டு வந்தோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை ஜெமீலா அரிசிஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (5) பிரமாண்டமான கூட்டமொன்று இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்ததும் பிரதமர் அங்கு உரையாற்றுகையில்,

எங்களது ஆட்சியின் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை இந்தநாட்டில் முன்னெடுத்து வருகின்றோம். நாங்கள் நல்லாட்சியிலும், அபிவிருத்திகளிலும் பெற்றுக் கொண்ட இந்த வெற்றியை உறுதிப்படுத்தி இளைஞர்களுக்கு ஒரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுக்க எதிர்வரும் நவம்பர் பதினாறாம் திகதி அன்னப்பறவைக்கு முன்னால் புள்ளடி இட்டு சஜித் பிரமதாசாவை ஜனாதிபதியாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மொட்டும், ராஜபக்சக்களும் இனவாதத்தை தூண்டிவிடவே முயற்சி செய்கின்றார்கள். இனவாதத்தை உண்டு பண்ணி நாட்டைப் பிளவு படுத்தி வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது ஒருபோதும் வெற்றியளிக்காது.
தமிழ் மக்களிடம் சொல்கின்றார்கள் இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் முஸ்லிம்களுக்கு வழங்குகின்றார்கள், நான் வந்தவுடன் பிள்ளையானை முதலமைச்சராக ஆக்குவேன் என்று கூறுகின்றனர். தமிழ் மக்கள் பிள்ளையானோடு விருப்பமில்லை தமிழ் மக்கள் விரும்புகின்ற ஒருவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு ஏன் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் ஒவ்வொரு இனத்தவர்களும் வாக்களிப்பு மூலம் முதலமைச்சர்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் உள்ளது. தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும் அவர் செயல்திறன் மிக்கவராக இருக்க வேண்டும். முதலமைச்சராக யாரை ஆக்க வேண்டும் என்று ராஜபக்சக்களினால் முடியாது.
தமிழ் மக்களிடம் ஒரு கதையும் சிங்கள மக்களிடத்தில் வேறு கதையும் கூறி அவர்கள் இனவாதத்தை உண்டுபண்ண எதிர்பார்க்கின்றனர். அதுதான் அவர்களுடைய வங்குறோத்து அரசியல் நிலைமையாகும்.
குண்டு வெடிப்புக்கு பிறகு எங்களுடைய முஸ்லிம் அமைச்சர்களை அவர்கள் தூற்றத் தொடங்கி விட்டார்கள். எல்லா இடங்களிலும் ஏசித் திரிந்தார்கள். நாங்கள் யாருமே பயங்கரவாதத்தை அனுமதிப்பது கிடையாது. இந்த ஐஎஸ். ஐஎஸ். தீவிரவாதத்திற்கு எதிராக அதிகளவு போராட்டங்களைச் நடாத்துபவர்கள் முஸ்லிம் நாட்டவர்களே இந்த குண்டுகளை வெடிக்க வைத்தவர்கள் ஐஎஸ். ஐஎஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள். குறித்த இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதியின் தலைமையகம் முற்றுகையிடப்பட்டு அந்தப் போரிலே அவர் உயிரிழந்தார். அதனை உலகத் தலைவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். அது தொடர்பில் நானும் கருத்து தெரிவித்துள்ளதோடு முஸ்லிம் புத்திஜீவிகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் ராஜபக்சக்கள் எதுவிதமான கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அல் பக்தாத் இறந்ததில் ஏதேனும் கவலை இருக்கின்றதோ தெரியவில்லை என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, செய்யத் அலி ஸாகிர் மெளலானா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், முன்னாள் கிழக்கு ஆளுநர் ரோகித போகல்லாகம உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -