தொழிலாளர் தேசிய முன்னணியின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு முன்னணியின் அட்டன் தலைமை காரியாலயத்தில் 30/10 இடம்பெற்றது
தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன், உபதலைவர் எ.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பணிப்பாளர் எஸ். நந்தகுமார் உட்பட பலர் காலந்துகொண்ட இந் நிகழ்வில் மஸ்கெலியா நோர்வூட் கொட்டகலை வட்டவலை நுவரெலியா பகுதிகளை சேர்ந்த பலர் உறுப்புரிமைகளை பெற்றுக்கொண்டனர்
எதிர்வரும் 04 ம் திகதி தொழிலாளர் தேசிய முன்னணியின் பேராளர் மாநாடு அட்டன் டி.கே.டயில்யூ கலாசர மண்டபத்தில் அமைச்சரும் முன்னணியின் தலைவர் பழநி திகாம்பரம் , பாராளுமன்ற உறுப்பினரும் முன்னணியின் செயலாளருமாகிய எம்.திலகராஜ் ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது இதன் போது
தொழிலாளர் தேசிய முன்னணியின் பதவிகளுக்கான போட்டிகளும் இடம்பெறவுளள நிலையில் போட்டிகளுக்கான விண்ணப்பபடிவங்களும் இன்று வினியோகிக்கப்பட்டது