ஹிஸ்புள்ளாவுக்கு வழங்கி வந்த ஆதரவினை தேசிய விடுதலை மக்கள் முண்ணனி விலக்கிக்கொண்டுள்ளது


எப்.முபாரக்-
னாதிபதி வேற்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாவுக்கு வழங்கி வந்த ஆதரவினை தேசிய விடுதலை மக்கள் முண்ணனி விலக்கிக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
கந்தளாயில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :

எமது கட்சி கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி முஸ்லிம் மக்களின் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் எமது தேசிய விடுதலை மக்கள் முண்ணனி ஜனாதிபதி வேற்பாளர் ஹிஸ்புள்ளாவுடன் ஒப்பந்தங்களை செய்து ஆதரவு தெரிவித்து வந்தோம்,தற்போது அவரின் போக்கு பிரச்சாரப் பணிகள் கடும் போக்கு வாதியை காட்டுவதாக உள்ளது இதனால் எமது ஆதரவினை விலக்கியுள்ளோம்.
எதிர் வரும் சில நாட்களில் எமது கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிடுவோம்,ஜனாதிபதி வேற்பாளர் யாருக்கென்ற ஆதரவினை தெரிவிப்போம்.
எமது கட்சி ஒற்றுமையாக செயற்படுகின்றது கட்சியின் உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் ஏனன்றால் அது அவர்களின் தனிப்பட்ட ஜனநாயக உரிமை இதில் யாரும் கைவைக்க முடியாது ஆனால் கட்சி கொள்ளையுடன் செயற்படுகின்றது .
எமது கட்சி இனி வரும் ஆனைத்து தேர்தல்களிலும் சுயற்சையாகவோ அல்லது கூட்டினைந்தோ தேர்தல்களில் சிறந்த வேற்பாளர்களை இறக்கி போட்டியிடுவோம்.
எமது கட்சியின் செயற்பாடுகள் கொள்ளைகள் முஸ்லிம் சமூகத்தின் குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -