ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டினை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாவட்ட மட்டத்தில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் அரச அச்சகர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இம்முறை 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என்றும்,
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 92 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.