கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ தேர்தல் விஞ்ஞாபனம் திங்களன்று வெளியீடு

‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கம் ஜனாதிபதி வேட்பாளர்’ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை மாலை அதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதுடன், தேர்தல் விஞ்ஞர்பனம் தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞர்பனத்தில் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நிலையான அபிவிருத்திக்கான பொருளாதார கட்டமைப்பு, முஸ்லிம்களின் சமய விவகாரம், சுகாதார வசதி வாய்ப்புக்கள், கல்வி, பள்ளிவாசல்கள்,இமாம்கள், முஅத்தின்களுக்கான விசேட திட்டம், நிர்வாக – காணி பிரச்சினைகள உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -