ஊடகவியலாளரை அவமதித்து பேசிய காவல்துறை அதிகாரியைக் கண்டிக்கக்கோரி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ராசமாணிக்கம் சாணக்கியன்.
பாராளுமன்றத்தில் காவல்துறைக்குப் பொறுப்பான
அமைச்சர் இங்கு இருப்பதால் கூறுகிறேன், சுலோச்சனா ராமய்யா என்ற
ஊடகவியலாளர் கடந்த முறை ஈரானில் இருந்து கப்பல் வந்தபோது, அந்தக்
கப்பலுக்குச் சென்று தகவல்களைப் பதிவு செய்ய முயன்றபோது, மிகக் கேவலமான
முறையில், இழிவான முறையில் அந்த ஊடகவியலாளரிடம் காவல்துறை அதிகாரிகள்
பேசியதாக அவர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஊடக அடையாள அட்டையைக் காண்பித்த பிறகும், அவர்கள் பேசிய சில வார்த்தைகளை நான் இங்குச் சொல்ல விரும்பவில்லை. 'இரண்டு ரூபா ஊடகவியலாளர்கள் நாட்டை
அழித்துவிட்டார்கள்' என்று ஒரு பெண் ஊடகவியலாளரிடம், அதுவும் ஒரு சர்வதேச ஊடகவியலாளரிடம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்.
இது குறித்து அந்த ஊடகவியலாளருக்கு காவல்துறையினரால் இழைக்கப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

0 comments :
Post a Comment