கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏழு உறுப்பினர்கள் விரைவில் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளனர் என்று அமைப்பின் தலைவர் எஸ்.ஐ. தெளபீக் (ஸஹ்வி) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா நாட்டின் வை.எம். சி.ஏ. இன் ஏற்பாட்டில் குறித்த அமைப்பிலிருந்து ஏழு உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணமாகி நிருவாகக் கட்டமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளை கையாளும் முறைகள் தொடர்பிலான பயிற்சி நெறியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்தியா வை.எம். சி.ஏ. மற்றும் மட்டக்களப்பு வை. எம். சி. ஏ. முக்கியஸ்தர்களுடன் ஓட்டமாவடி - மாஞ்சோலை சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது சிகரம் அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் ஆவணங்களை ஒழுங்குமுறைப் படி பராமரித்தமைக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள் பாராட்டுக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.