மனித உணர்வுகளினை அடிப்படையாக கொண்டு நகரும் சந்தைப்படுத்தல் உத்திகள்


தற்போதைய இருபத்தொராம் நூற்றாண்டில் சந்தைப்படுத்தலானது பெரிதும் சவாலான ஒன்றான நிலைபெற்றுள்ளது. அந்தவகையில் சந்தைப்படுத்தலிற்கான மிகவும் தனித்துவமான ஓர் கருவியாக சந்தைப்படுத்துபவர்கள் மனித உணர்வுகளைப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் மனித வளமானது ஏனைய வளங்களுடன் ஒப்பிடுகையில் சிந்தித்து துலங்கக் கூடிய ஆற்றல் கொண்ட வளமாகும் ஆகையால் சந்தைப்படுத்துபவர்கள் மனித உணர்வுகளை கட்சிதமாக தங்களுடைய தந்துரபாயங்களுக்கு உட்படுத்துகின்றனர். அந்தவகையில் சந்தைப்படுத்தலிற்கு மனித உணர்வுகள் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என ஆராயலாம்.
நுகர்வோர் மத்தியில் குறித்த பொருள் அல்லது சேவைகள் தொடர்பாக புரிந்துணர்வினையும் அறிவினையும் ஏற்ப்படுத்துவதற்கு விளம்பரப்படுத்தலானது ஓர் சாதனமாக காணப்படுகிறது. இதனை உற்று நோக்கும் போது ஒருவருக்கு கருத்தும் பொருளும் தெளிவுற நியாயப்படுத்துவதற்கு மனித உணர்வுகளை நிழற்படமாக விளம்பரங்களில் சித்தரிக்கப்படுகின்றது. அந்தவகையில் விளம்பரப்படுத்தலானது பல வழிமுறைகளில் கைக்கொள்ளப்படுகின்றது.ஒரு அச்சு விளம்பரத்தில் அல்லது தொலைக்காட்சி விளம்பரத்திலோ மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமானால் உணர்ச்சி பரிணாமங்களைக் கொண்ட  ஒரு வியாபாரக்குறியின் முக்கிய கூறுகளை பிரதிபலிக்க முடியும். உதாரணமாக
மனிதர்களுக்கிடையில் மனோபாவங்கள், சக்தி மற்றும் நிதியியல் நிலைகள் மாற்றமடைவது போல வியாபாரக் குறிகளுக்கிடையிலும் பல தனித்துவங்கள் காணப்படுகின்றன. இவற்றினை வேறுபடுத்தி பகுத்தறிவதற்காக மனித உணர்வுகளை வியாபாரக் குறியுடன் தொடர்புபடுத்துகின்றனர். அந்தவகையில் விளம்பரப்படுத்தலானது பொதியிடல், வாசகங்கள்,கவர்ச்சி, பாவனைமுறைகள் மற்றும் கிடைப்பனவுத்தன்மையானது குறித்த ஒருசில நொடிகளில் பாவனையாளர்களின் மனதைத் தொடும் வண்ணம் வடிவமைக்கின்றனர். இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அறிவூட்டல் மற்றும் நுகர்வுக் தூண்டுகை செயன்முறைகள் ஒரே பார்வையில் இடம் பெறுகின்றது.
விளம்பரப்படுத்தலானது மனித உணர்வுகளைத் தூண்டக் கூடிய இன்னோர் அடித்தளமாகும். எவ்வாறெனில் விளம்பரப்படுத்தலானது ஓர் விவரிப்பு முறையாகும்.இதன் மூலம் குறித்த வியாபாரக்குறியினது அடிப்படைத் தன்மைகளைக் குறிப்பிடுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு குறுகிய நேரத்தில் கொள்வனவைத் தூண்டக் கூடிய உந்துதலை அளிக்கிறது.
கொள்வனவாளர்கள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபடுதலானது எதர்ச்சியான ஒன்றாக எப்போதும் கருத முடியாது. ஏனெனில் கொள்வனவு நடவடிக்கையானது சமீபத்தில் அல்லது கடந்தகால அனுபவங்களில் இருந்து எழலாம். ஆகவே விளம்படுத்தல் மூலம் மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர் மத்தியில் தடம் பதிப்பதற்காக விளம்பரப்படுத்தலினை சந்தைப்படுத்துபவர்கள் உபயோகிக்கின்றனர்.
சந்தைப்படுத்துபவர்கள் வாடிக்கையாளர் மத்தியில் சுய கௌரவத்தைத் தூண்டும் வகையிலும் தமது உற்பத்திகளை விளம்பரப்படுத்தலின் ஊடாக கொண்டுசெல்கின்றனர். உதாரணமாக அப்பிள் கம்பனியினால் வடிவமைக்கப்படுகின்ற ஐ போன் ஆனது வாடிக்கையாளர் மத்தியில் தமது சுய கௌரவத்தினை உறுதிப்படுத்த கொள்வனவு செய்யத் தூண்டுகின்றது. இதற்காக அப்பிள் நிறுவனத்தினர் முற்றிலும் வேறுபட்ட வகையில் கறுப்பு வெள்ளை நிறங்களை அனேகமாகப்பயன்படுத்தி மனித உணர்வுகளைத் தூண்டுகின்றனர்.
சந்தைப்படுத்தலானது ஓர் கலையாகக் காணப்படுவதனால் பெருமளவில் மனித உணர்வுகளில் தாக்கத்தை உண்டாக்குகின்றது. இருப்பினும் பல ஏமாற்று நடவடிக்கைளும் கைக்கொள்ளப்படுவதனால் சந்தைப்படுத்துபவர்கள் உதாரணமாக வாழ்கைக்கோல விளம்பரப்படுத்தலைப் பயன்படுத்துகின்றனர். இவ்முறையானது மக்கள் மத்தியில் உண்மைத்தன்மையினையும் உறுதித் தன்மையினையும் வழங்குகின்றது. இவற்றிற்கு அடிப்படையாக மனித உணர்வுகளையே தமது சாதனமாக பயன்படுத்துகின்றனர்.
விளம்பரப்படுத்தலானது அதிகளவில் மனித உணர்வுகளையே தங்கியிருக்கின்றது. என பல ஆராய்சிகள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அதன்னடிப்படையில் ஆறு முக்கிய மனித உணர்வுகளை தமது தந்திரோபாயங்களுக்காக உபயோகிக்கின்றனர். (ஆச்சரியம், கவலை, கோபம்,பயம், வெறுப்பு மற்றும் சந்தோசம் ).
இவற்றினடிப்படையில் உணர்ச்சி நிலையென்பது  எப்போதாவது எம்மால் உணரப்படுகின்ற ஒருவித உணர்வு சார்ந்த அனுபவ நிலையாகும். நாம் உணரும் தூண்டுதலைப் பொறுத்து எமது உணர்வு நிலையானது நாளுக்கு நாள் அல்லது கணத்திற்கு கணம் வேறுபடுகின்றது. இவ்வகையான உணர்வு நிலையானது வெளிப்படுத்தக் கூடியதும் வெளிப்படுத்த முடியாமலும்  இன்னமும் உள்ளன. இவ் உணர்ச்சி நிலையானது மனித அனுபவத்தின் சாதாரண மற்றும் அசாதாரண  சிக்கல் வாய்ந்த தொடர்பாடல் முறைகளையும் தோற்றுவிக்க முனைகின்றது. அந்தவகையில் வாய்மொழி மூலமாகவோ அல்லது முகபாவனை மற்றும்  மொத்த உடல் இயக்கங்கள் சைகைகள்  மூலமாகவோ உணர்ச்சிகள் பிரதிபலிக்கப்படுகின்றன. உணர்ச்சிகளானது தொடர்பாடல் செயன்முறையின் முழுமைக்கு பயன்படுகின்ற ஓர் கருவியாகும். இக்கருவியினை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் குறித்த சமூக கலாச்சார பிரதிபலிப்புக்களையும் மற்றும் உரிய சட்டதிட்டங்களுக்கமைவாகவும் தமது சந்தைப்படுத்தல் நடவடிக்கையினை மனித உணர்லுகளுடன் தொடர்புபடுத்தி அக்கால வணிகர்கள் தமது தந்திரோபாயத்தை நகர்துகின்றனர். இதுவே தற்காலத்தில் எவ்வகையான தொடர்பு சாதனங்கள் உருப்பெற்றாலும் மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டே தமது விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்க்கொள்கின்றனர்.
பு. தீபா
2ம் வருட மாணவி,           
வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம்,
கிழக்கு பல்கலைக்கழகம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -