ஈரானுடன் பேசுவதற்கு சவூதியை தூண்டியது எது ? இந்த ஒற்றுமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்புமா ?


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-
ரானுடன் நேரடியாக பேசுவதற்கு சவூதி விருப்பம் தெரிவித்து தூது அனுப்பியுள்ளது. இதனை உளப்பூர்வமாக ஏற்று தாங்கள் சவூதியுடன் பேசுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அதற்கும்மேலே சென்று எந்தவித நிபந்தனையுமின்றி தாங்கள் பேசுவதற்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த செய்தி உலகில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனைகளை அவர்களே மனம்விட்டுப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதாரத்துக்கே பாதிப்பினை ஏற்படுத்துவகையில் சவூதியின் பிரதான எண்ணை உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை ஈரான்தான் நடாத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் உதவியுடன் ஈரான் மீது தாக்குதல் நடாத்தும் திட்டத்தினை சவூதி மேற்கொண்டபோதுதான், யேமனில் இயங்கிவருகின்ற ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி இஸ்லாமிய போராளிகள் சவூதியின் நஜ்ரான் பிரதேசத்துக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி ஆயிரக்கணக்கான சவூதி படையினர்களை கைது செய்திருந்தார்கள்.
அமெரிக்காவிடமிருந்து வாங்கி குவிக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்மீதும், படைக்கட்டமைப்பின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்த சவூதி, இந்த தாக்குதலினால் பலத்த பின்னடைவை சந்தித்தது.
இந்த பின்னடைவுதான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வலிந்து தூதனுப்புவதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.
உலக இஸ்லாமியர்களுக்கு தலைமை தாங்கும் முழு தகுதியும் சவூதி அரேபியாவுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்து வருவதுடன் தங்களது பொருளாதார நலனுக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்கி வருகின்றார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் முதலாவது கிப்லாவான “பைத்துல் முகத்தஸ்” அமைந்துள்ள பாலஸ்தீனை இஸ்ரேலிடமிருந்து மீட்பதற்காக இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்ரேலுக்கெதிராக போராடிவருகின்ற நிலையில், பாலஸ்தீனர்களுக்கு உதவி வழங்குவதற்கு பதிலாக இஸ்ரேலுடன் கள்ளத்தனமாக உறவுகளை பேணிவருவது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் சவூதி அரச குடும்பத்தினர் மீது அதிருப்தி அலைகளை தோற்றுவித்துள்ளது.
எது எப்படி இருப்பினும் சவூதியின் இந்த மன மாற்றம் தொடர்ந்து நீடிக்க வேண்டும், இதன்மூலம் உலக இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் ஒற்றுமை வளர வேண்டும் என்பதுதான் அனைவரதும் பிராத்தனையாகும்.
ஆனால் சீயா, சுன்னா என்ற மந்திரத்தைக்கொண்டு இஸ்லாமிய உலகை பிரித்தாளும் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த ஒற்றுமையை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இதுதான் இன்றுள்ள சவாலாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -