மௌலவி அல்-ஹாஜ் A.R.மொஹம்மட் அஸ்மி (தீனி) அவர்களை கௌரவிக்கும் விழா


கொழும்பு மட்டக்குளியில் அமைந்துள்ள சமூக சேவை மற்றும் ஜனாஸா நலன்புரிசங்கத்தின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டும் சுமார் 40 வருட காலமாக கொழும்பு 15 முஹியதீன் ஜும்மா மஸ்ஜிதில் கடமையாற்றிய மௌலவி அல்-ஹாஜ் A.R.மொஹம்மட் அஸ்மி (தீனி) அவர்களை கௌரவிக்கும் விழா மட்டக்குளிய காக்கை தீவு நலன்புரி சங்க கட்டிடத்தில் 22/09/2019 ஆம் திகதி நடைப்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஜனாஸா சங்க தலைவர் அல்-ஹாஜ் அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமை வகித்தார். விழாவில் மேல் மாகாண சபை உறுப்பினர் A.மொஹம்மட் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மொஹம்மட் அஸ்மி (தீனி) மௌலவி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயமும் பணப்பரிசுயும் வழங்கி கௌரவித்தார்,
இவ்விழாவிற்க்கு கொழும்பு15ல் அமைந்துள்ள சகல பள்ளி வாசல்களின் மௌலவிமார்களும், ஊர் பிரமுகர்களும், சங்கத்தின் செயலாளர் மொஹம்மட் முஸம்மில்J.P பொருலாளர் அல்-ஹாஜ் அப்துல் சலாம் உட்பட சங்கத்தின் ஏனைய அங்கத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -