அம்பாறை கிட்டங்கி வீதி வெள்ள நீர் பரவல் ஆரம்பம்

பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் கல்முனை – நாவிதன்வெளியை இணைக்கும் கிட்டங்கி வீதிக்கு மேல் வெள்ளம் பரவ ஆரம்பித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமாயின் இதனூடான போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்படும் அபாயமுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக கல்முனையிலிருந்து மத்திய முகாமிற்கு செல்லும் பிரதான பாதையிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் அதிகரித்தால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள மத்தியமுகாம்இ மண்டூர். சவளக்கடைஇ சாளம்பைக்கேணி 6ஆம் கொளனி 12ஆம் கொளனி 4ஆம் கொளனி 15ஆம் கொளனி போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை இப்பகுதியால் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கல்முனை – நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி வீதிக்கு உரிய பாலங்களை அமைக்குமாறு நீண்டகாலமாக மக்கள் கோரிக்கைவிடுத்துவருகின்றனர். இம் மக்களின் கோரிக்கைகள் இதுவரை செவிசாய்க்கப்படவில்லை இதனால் பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -