கோத்தாவின் கூட்ட மேடைகளில் சுதந்திர கட்சி ஏறாது என்கிறார் தயாசிறி.


எ.எம்.றிசாத்-
யாரை ஆதரிப்பது என்ற குழப்பநிலையில் சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கோத்தாவை ஆதரிக்கும் முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமேடைகளில் ஏறும் போது ராஜபக்ச ஆதரவாளர்கள் கூச்சல் போட்டு பேசவிடாமல் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை தடுக்கின்றனர்.

இந்த கூச்சல் காரணமாக சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது எந்த மேடை ஏறுவது தொடர்பாக ஏனைய அரசியல்வாதிகளால் நகைப்புரியதாக பார்க்கப்படுகிறது.இதற்கு முதன்முதலில் முகம்கொடுத்தவர் துமிந்த திசாநாயக்க அதேபோல் இன்னும் பல சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களும் முகம்கொடுத்துள்ளனர்.

எனவே இதற்கு பிறகு கோத்தாவின் கூட்டங்களில் ஏறுவதா இல்லையா என்ற நிலையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கோட்டாவின் கூட்டத்தில் ஏறப்போவது இல்லை என்ற கருத்தினை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி வெளியிட்டுள்ளார்.
கோத்தாவின் பிரசார கூட்டத்தில் ஏறினாள் நாங்கள் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அஞ்சி கோட்டாவின் எடுபிடிகள் போல் செயற்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் தயாசிறி கருத்து வெளியிட்டுள்ளார்...

ராஜபக்சக்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்படி எடுத்தாலும் தான் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடியும் வரை கோட்டாவின் பிரச்சார மேடைகளில் ஏறப்போவது இல்லையென்றும் அவர் தெரிவித்தார்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -