இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களது ஆலோசனைக்கமைவாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினமும், பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 24 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடும் விழாவும் எதிர்வரும் 23 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் பல்கலைக்ழக கலை, கலாசார பீடத்தின் தமிழ் மொழித்துறை பேராசிரியர் எம்,ஏ.எம். றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் போது, பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறைப் பிரிவின் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸீல் அவர்களினால் பல்கலைக்கழக ஸ்தாபகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகருமான அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தொடர்பான நினைவு சொற்பொழி ஆற்றப்படவுள்ளதுடன் இன்னும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பல்கலைக்கழகம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அயராத முயற்சியினால் கடந்த 1995.10.23 ஆம் திகதி அட்டாளைச்சேனை அரசாங்க ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பல்ககைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவர்களுடன் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பீடங்களின் பீடாதிபதிகள், பகுதித் தலைவர்கள். விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் மாணவர்களும் ஏனையோர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.