சஜித்துக்காக அமீர் அலியுடன் கைகோர்த்துள்ள ஓட்டமாவடியின் முக்கிய புள்ளிகள்.


 ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ல்குடாவின் அரசியல் அதலைமையான அமீர் அலியுடன் எதிரும் புதிருமாக அரசியல் மேற்கொண்டு ஓட்டமாவடியின் முக்கிய புள்ளிகளான கடந்த சிறீலங்க முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு அதிகப்படியான பிரதேச சபை ஆசனங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்த பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா ஜி.எஸ். மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவரும், கல்குடாவின் அரசியல் செயற்பாட்டாளருமான தேசபந்து நியாஸ் ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித்துடைய வெற்றியினை கல்குடாவில் உறுதிப்படுத்தும் முகமாக அமைச்சர் அமீர் அலியுடன் கைகோர்த்திருப்பதனது ஜனாதிபதி தேர்தலுக்கு அப்பால் கல்குடாவில் அமீர் அலியினுடைய அரசியல் இஸ்தீர தன்மையினை முழு மாவட்டத்துக்கும் எடுத்துக்காட்டும் விடயமாக உள்ளது.
பாரிய விவசாய திட்டங்களை கல்குடா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் ஹரிசனுக்கு விருந்தளிக்கும் முகமாக பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா ஜி.எஸ்யின் வீட்டில் இடம் பெற்ற விருந்துபசாரத்திலே ஓட்டமாவடியின் முக்கியமான அரசியல் செயற்பாட்டாளராகவும், பெரும்புள்ளிகளாகவும் சமூகத்தால் மதிக்கப்படும் மேற்குறிப்பிட்ட இருவரும் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியிடன் சஜித்துடைய வெற்றிக்கக கைகோர்த்துள்ளதுடன் அவருடைய எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமகா இருந்து செயற்படுவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -