சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை இஸ்மாயில் வித்தியாலயத்தின் நுஸ்கி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இஸ்மாயில் வித்தியாலய அதிபர் ஏ.சலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் பிரதம அதிதியா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் நுஸ்கி பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பஸ்மியா, நியாஸா, பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் நம்சிறார்களை நல்வழிப்படுத்தக்குடிய நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் இந்த காலகட்டத்தில் கட்டாய தேவைப்பாட்டில் உள்ளோம் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.