ஒரு நாட்டின் நிலையான அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்றால் பொது மக்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

ஹட்டன் கே.சகந்தரலிங்கம்- 

மது நாடு நிலையான அபிவிருத்தியினை அடைய வேண்டும் என்றால் பொது மக்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும.; மக்கள் இன்று நாட்டில் நடைபெறுகின்ற அபிவிருத்தி விடயகளை தொடர்பாக தெளிவான நிலையில் இல்லாதே இருக்கின்றனர். இதற்கு அரசியல் தலைவர்களும் காரணம்.எமது நாட்டில் பல்வேறு பௌதீக வளங்கள் காப்படுகின்ற போதிலும் அவற்றில் முழுமையான பயனை பெற முடியாத நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.

நல்ல அபிவிருத்தி திட்டங்களை நாட்டிற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என ஆய்வு செய்து அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது மக்கள் அவற்றை முழுமையாக ஆராயாது எதிர்ப்பினை வெளியிடுவதனால் பல அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என மொரட்டு பல்கலைகழகத்தின் பேராசியர் ஏ.ஜி.துசித சுகதபால தெரிவித்தார்.

நாட்டில் நீர் வலு மற்றும் எரிசக்தி அமைச்சினால் முன்னெடுனக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்த நுவரெலியா மாவட்ட ஊடாக விலாயலாளர்களை தெளிவு படுத்தும் செயலர்மர்வு ஒன்று நேற்று ( 07) திகதி நுவரெலியா சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று எமது மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்காக ஒரு மின்சார அலகுக்கு கூடுதலான நிதி அறவிடப்படுகின்றன.

இதனை குறைத்து கொள்ள வேண்டும் என்றால் மின்சார உற்பத்தி செலவினை குறைக்க வேண்டும்.அத்தோடு தனியாருக்கு சிறிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் ஆனால் நாம் அவ்வாறு முன்னெடுக்கும் போது மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்கு லாபம் ஈட்டுவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் அதனால் சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்து எதிர்க்கின்றனர் இதனால் பல திட்டங்கள் தாமதமாகியும் கைவிடப்பட்டும் இருக்கின்றன.

வருடாந்தம் மின் பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன.அதனை ஈடு செய்வதற்கு மாற்று வழிகளுக்கு தள்ளப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளன.அதற்காக நாம் எரிபொருளின் மூலம் மின்சாரத்தினை பெற்றுக்கொண்டால் அதற்கு அதிக செலவாவதுடன் அதன் மூலம் வெளியிடப்படும் காபம் உட்பட நச்சுத்தன்மை வாய்ந்த வாய்வினால் சூழலுக்கு பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

அது மற்றும் அல்லாது அதிகமான
காபன் வாயு வெளியிடப்படுவதனால் புவியின் வெப்பநிலையும் அதிகரிக்கும் எனவே நீர் மின்வலுவின் மூலமே பாதிப்புக்கள் ஏற்படுவதனை தடுக்க முடியும் ஆனால் எமது நாட்டின் பொது மக்கள் தெளிவடையாததனால் அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆகவே சரியான தெளிவினை வழங்க வேண்டி பொறுப்பு ஊடகவியலாளராகிய உங்களுக்கே உள்ளது.ஆகவே தான் நாங்கள் பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தி வருகின்றோம் இன்று நாங்கள் சுகாதார தாபனத்துடன் பல ஒப்பந்தங்களை கைச்சாதிட்டுள்ளோம். புவி வெப்பநிலையினை குறைப்பதற்கு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் செயப்பட வேண்டும் அதிலிருந்து எவரும் விடுபட முடியாது.

வளர்ச்சியடைந்த நாடுகள் நகரங்களை அபிவிருத்தி பணிகளை தி;ட்டமிடும் போது கிராம மக்களை ஓர் இடத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்குரிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். 

ஆனால் எமது நாட்டில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து இயற்கை சூழலின் சமநிலையினை பாதிப்படையச் செய்கின்றனர். இந்த செயப்பாடுகளின் பின் விளைவுகளை நாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும் அரசியல் லாபம் கருதி எடுக்கப்படுகின்ற முடிவுகளினால் எமது எதிர்கால சமூகமே இவற்றிக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -