பிரதமரின் ஆசிர்வாதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் –இம்ரான் எம்.பி

பிரதமரின் ஆசிர்வாதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிண்ணியா டீ.பீ ஜாயா மகளிர் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணினி ஆய்வுகூடத்தை நேற்று மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எமது அரசாங்கம் பதவியேற்ற காலத்தில் இருந்து கல்வி துறையில் பாரிய அபிவிருத்தியை செய்துள்ளோம். "அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை"திட்டத்தின் மூலம் இங்குள்ள அனேகமான பாடசாலைகளுக்கு கட்டிடங்களை வழங்கியுள்ளோம். இன்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கணினி ஆய்வுகூடத்தை உங்கள் பாடசாலைக்கும் மூதூர் கிளிவெட்டி மகாவித்தியாலத்துக்கும் வழங்கியுள்ளோம். இது போன்ற அபிவிருத்திகள் கல்வி துறையில் என்றும் நடைபெறவில்லை.
ஆனால் சில ஊடகங்களின் கண்களுக்கு இந்த நல்ல விடயங்கள் தெரிவதில்லை. அவர்கள் எங்களிடம் கேட்பது யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதையே! இந்த கேள்வியை எழுப்பி ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தலாம் என இவர்கள் எண்ணியுள்ளனர்.
அவர்களுக்கு நாம் கூறிக்கொள்ள விரும்புவது பிரதமரின் ஆசிர்வாதத்துடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கபடுவார். இன்று அவரின் பெயரையே கிராம மக்களும் ஐக்கியதேசிய கட்சியின் ஆதரவாளர்களும் உச்சரிக்கின்றனர்.மக்கள் விரும்பும் வேட்பாளரை பிரதமர் அறிவிப்பார். யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஐக்கிய தேசிய கட்சி என்பது ஜனநாயக கட்சி. இங்கு கட்சி உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக முடியும். மற்ற கட்சிகளைப் போல் அண்ணனுக்கும் தம்பிக்கும் மகனுக்கும் உரித்தான கட்சியல்ல என தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -