விபத்தில் இறந்த இரு எருமை மாடுகள் நடுத்தெருவில் வீசப்பட்டுக்கிடந்தது.இருநாட்களாகியும் உரிமை கோரப்படாமையினால் பிரதேசசபையினால் கவுண்டிகொண்டு அடக்கம்செய்யப்பட்டது.
இச்சம்பவம் காரைதீவில் நேற்று இடம்பெற்றது.
சம்பவம் பற்றித்தெரியவருவதாவது:
கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் இரு எருமை மாடுகள் காரைதீவு நிந்தவூர் பிரதானவீதியில் மோதுண்டு கிடந்தன. ஒன்று பிரதானவீதியிலும் மற்றயது அருகிலுள்ள வயலுக்குள் தூக்கிவீசப்பட்டுக்கிடந்தது.
இருநாட்களாகியும் எவரும் உரிமைகோரப்படாத நிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
நேற்று காலை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் ஸ்தலத்திற்குச்சென்றுபார்த்து மாடுகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டதற்கமைவாக கவுண்டி உழவுஇயந்திரங்கள் சகிதம் சபை ஊழியர்கள் சென்று அவற்றை அடக்கம்செய்தனர்.
இரவில் கள்ளமாடு கொண்டுசென்றோர் வாகனத்திலிருந்து தவறவிட்டவேளை விபத்து சம்பவித்திருக்கலாம் எனவும் அதில் இவ்விரு எருமை மாடுகளும் மோதுண்டு இறந்திருக்கலாமெனவும் தெரியவருகிறது.