எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் இயங்கிவரும் அல் மத்ரஸதுஸ் ஸக்கிய்யா குர்ஆன் பாடசாலையின் 14 வது மாணவர் வெளியேற்று விழாவும் கலை, கலாச்சார நிகழ்வும் நேற்று முன்தினம் மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குர்ஆன் பாடசாலையின் பொறுப்பாசிரியர் மௌலவி எம்.எஸ்.சரீப் அலி (ஸலாமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பிரதித் தலைவருமான எஸ்.எச்.அறபாத் (ஸஹ்வி) கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கலாபீட அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி, குலோபல் வெல்ஸ் பணிப்பாளர் எஸ்.ஏ.பர்ஹான் ஸலபி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செம்மண்ணோடை அமைப்பாளர் எம்.எச்.எம்.ஹகீம் ஆசிரியர் உட்பட உலமாக்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மூடநம்பிக்கை தொடர்பான சிறப்பு நாடகம் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.