கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ ,தனி நபரோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை -கோடீஷ்வரன் MP


டந்த ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ ,தனி நபரோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இன்று இருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறான் அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெற கூடாதென்பதே எமது நோக்கம்.என பாடசாலை கட்டிட திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்தார்.

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தொனிப்பொருளின்கீழ் கல்வி அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் நிருவாக அலகுடன் கூடிய வகுப்பறை கட்டிடம் ஆசிரியர் விடுதி, கட்டிடத்தின் திறப்புவிழா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மைதானத்திற்கான சுற்றுமதில் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(9) காலை 09:30மணியளவில் கல்லூரி முதல்வர் அருட்சகோதர் எஸ். சந்தியாகு தலைமையில் நடைபெற்றன.
திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள்...... எதிர்காலமென்பது கல்வி சிறார்களின் கையிலிருக்கின்றது. நாட்டை சரிவர நிர்வகிக்கின்ற திறன் எதிர்கால சிறார்களின் கரங்களிலே இருக்கின்றது. மேலைத்தேய நாடுகள் கல்வி ரீதியான வளர்ச்சியில் உச்சத்தை எட்யிருக்கும் காலகட்டத்தில் நாம் அவர்களுடன் போட்டிபோடவண்டிருக்கிறது . கல்வி ரீதியான வளர்ச்சியில் மேலைத்தேய நாடுகள் பாரிய பொருளாதார ,தொழில்நுட்ப ,விவசாய வளர்ச்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் இன்னும் தொழில்நுட்ப ரீதியில் பூரண வளர்சிபெறவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை அடையும்போதே நாடு வளம் பெறும். அதனூடாகவே தனிநபர் வருமானம் உச்சம் பெறும் .

ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரம் இந்த ஆட்சிக்காலத்தில் தான் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவியல் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது.
வெள்ளை வேன் கலாச்சாரம் ஏனைய கடத்தல்கள் அத்துமீறிய செயற்பாடுகள் மூலம் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த ஆட்சிக்காலத்தில் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை சொல்லக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த ஆட்சி வழங்கி இருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ ,தனி நபரோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை இருந்து அதனை மீறி செயற்பட்டால் இருப்பு குறித்தும் கேள்விகள் எழுந்தன. இன்று அஇருந்தவன் நாளை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறான் அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெற கூடாதென்பதே எமது நோக்கம்.
இந்த ஆட்சியிலேதான் விவசாயத்தில் பாரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றது. என தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், கல்முனை மாநகர சபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், , உப வலயக்கல்வி பணிப்பாளர், எஸ்.புவநேந்திரன், கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .சரவணமுத்து ,ஆசிரியர்கள், மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழுவின், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -