கடந்த 7 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கண்காட்சி ஆரம்பமானது. ஊடக வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கூடங்களுக்கு பிரதமர் விஜயம் செய்தார்.
இதன் போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக கூடத்திற்கு விஜயம் செய்த பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பழமைவாய்ந்த திரைப்பட தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட புகைப்பட கருவிகளையும் பிரதமர் பார்வையிட்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் யாழ்ப்பாணத்தை கேந்திரமாக கொண்டு வரலாற்று காலம் தொடக்கம் நடைபெற்ற வர்த்தக பொருளாதாரம் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சமகால அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



