அமீர் அலி விளையாட்டு மைதானம் உயிர் அச்சுறுத்தல் என்றால்.! எதற்காக அஹமட் தனது கழகத்தின் போட்டிகளை அங்கே நடாத்த வேண்டும்.?


Oddamavadi ahmed irshad-
ட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கானது, மிகவும் ஆபத்தாக இடிந்து விழும் நிலையில் காணப்படுவதனால், அதனை பொது மக்களோ, விளையாட்டு வீரர்களோ பயன்படுத்துவதை முற்றாகத்தடை செய்ய வேண்டும் என பகிரங்க அறிக்கைகளை விடும் ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் அஹமட் எதற்காக உயிராபத்துள்ள விளையாட்டு மைதானத்தில் தனது கழகம் நடாத்தும் கடிண பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியினை நடாத்துகின்றார் என்ற கேள்வி பிரதேச மக்களாலும், அமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்களாலும் எழுப்பப்படுகின்றது.
பிரதேச சபை அமர்வுகளில் முக்கிய பேசு பொருளாக அமைச்சர் அமீர் அலிக்கு சேறு பூசும் விதமாக பிரதான ஆயுதமாக குறித்த விமர்சனத்தினை கையிலெடுத்து உரையாற்றி வரும் அஹமட்., அவ்வாறு விளையாட்டு வீரர்களையும் மக்களையும் குறித்த விளையாட்டு மைதானத்தில் இருந்து பாதுகாப்பதுதான் அவருடைய ஆத்மார்த்தமான சிந்தனை என்றால்.! எதற்காக நாளாந்தம் ஆயிரக்கணக்கன ரசிகர்கள் கண்டுகளிக்கும் விதமாக ஒரு மாதகாலமாக இடம் பெறும் தனது கழகத்தின் கிறிக்கட் சுற்றுப்போட்டியினை அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடாத்த வேண்டும் என்பதே முக்கியமாக இங்கு நடு நிலையாக சிந்திக்க வேண்டிய விடயமாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் அஹமட் நடாத்தும் கிறிக்கட் சுற்றுப்போடிட்யின் இறுதிப்போட்டியானது வளர்பிறை விளையாட்டு கழகத்துக்கும் அவருடைய ரேஜர்ஸ் கழகத்துக்கு இன்று மாலை( 01.09.2019) இடம் பெற உள்ளது. இறுதிப்போட்டியினை கண்டுகளிப்பாதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வரக்கூடிய குறித்த போட்டியையாவது மக்களினது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அஹமட் வேறு மைதானத்திற்கு மாற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யால், வேண்டும் என்றே அமைச்சர் அமீர் அலிக்கு சேறு பூசும் விதமாக அவருடைய பிரதேச சபையின் ஆட்சியிலே பிரதி தவிசாளராக இருந்து கொண்டு இவ்வாறான அரசியல் பூச்சாண்டி விளையாட்டுக்களை காட்டுவது படித்த இளைஞர்களினால் ஏற்றுக்கொள்ள முடியுமா.? என்ற கேள்வி எழுவது சர்வசாதாரணம்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குறித்த மைதானத்தின் விளையாட்டரங்கானது இன்னும் பல வருடங்கள் பாவனைக்கு உகந்ததாக இருக்கின்ற அதே நேரத்தில் அது உப்பு மற்றும் சதுப்பு நிலங்களை அண்டிய பிரதேசத்தில் இருப்பதினால் பல அடிகள் உயரத்திற்கு கிறவல் நிரப்பட்டே விளையாட்டரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
ஆகவே கல்குடா பிரதேசத்தில் இவ்வாற்றான மைதானத்தினையும், அதற்கான சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டரங்கினையும் பிரதி அமைச்சர் அமீர் அலியே கல்குடா மண்ணுக்கு கொண்டு வந்தார். ஆனால் பிரதி தவிசாளருக்கு உடனடியாக புதிய விளையாட்டு அரங்கினை கல்குடா மக்களுக்கு கட்டிக்கொடுக்க வேண்டும் என்றால்.! ஏன் அவர் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சியின் முக்கிய புள்ளியாகவும், அவருடைய அரசியல் தலைவனாக இருக்கும் முன்னால் கிழக்கின் ஆளுனரும், அமைச்சருமான ஹிஸ்புல்லாவை வைத்து கட்டிக்கொடுக்க முடியாது.?
ஆனால் அஹமட்டுக்கு தற்பொழுது தேவையாக உள்ளவை எல்லாம் கல்குடாவில் அமீர் அலிக்கு இருக்கும் செல்வாக்கினை உடைத்து வெளியூர் அரசியல் வாதிகளின் வெற்றியினை உறுதிப்படுத்தி கொள்வதற்கான அடித்தளத்தினை மிக உறுதியாக போட்டுக்கொள்வதாகும். அதற்காக எவ்வாறு அமீர் அலிக்கு எதிரான அரசியல் சேறு பூசல்களை எல்லாம் மேற்கொள்ளலாம்.? அதற்காக என்ன விடயங்களை தேடிப்பிடிக்கலாம்.? எவற்றை கூறினால் இளைஞர்கள் மத்தியில் செலாவாக்கு அதிகரித்து அதனை அவருக்கு எதிரான கட்சிக்காரர்கள் முக நூல்களிலும், சமூக வலைத்தளக்களிலும் எழுதுவார்கள்.? என்ற கேள்விகளுக்கான விடையாகவே அமீர் அலிவிளையாட்டு மைதனத்தின் அரங்கினை ஆயுதமாக அஹமட் தற்பொழுது கையில் எடுத்துள்ளார்.
ஆனால் இங்கு ஒரு உண்மையினை பிரதி தவிசாளர் அஹமட் மிகத்த் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். அதாவது அவர் இன்று பிரதி தவிசாளர் எனும் பதவியில் உட்கார்ந்திருப்பது அமீர் அலி வகுத்த அரசியல் வீயூகத்தினால் கிடைத்தது என்பதனை மறவாமல் செயற்படுவது ஒரு புறமிருக்க..! அவ்வாறுதான் புதிய விளைட்டரங்கு ஒன்று மீண்டும் அமீர் அலி மைதானத்தில் கட்டப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு ஏற்படுமானால்,! சமகாலத்தில் அது கல்குடாவில் அரசியல் ரீதியான அபிவிருத்திகளை கொண்டு புதுமைகளை ஏற்படுத்தும் அமீர் அலியினால் மட்டுமே சாத்தியப்படும். ஆகவே நீங்கள் அற்ப தேவைகளுக்காக கூஜா தூக்கும் வெளியூர் அரசியல்வாதிகளினால் அரங்கினை அமைப்பதற்காகன மூச்சு காத்துக்கூட படாது என்ற உண்மையினை விளங்கி சமூகத்தின் வளர்ச்சிக்காக செயற்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -