அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முனணனியின் மாவட்டக் கிளைகளின் தலைவா் மற்றும் அங்கத்தவா்கள் 60 பேர் இணைந்து எதிா்வரும் ஜனாதிபதியாக வரும் சகல வேற்பாளா்களிடமும் முஸ்லிம் சமுகத்தின் வேண்டுகோள் சம்பந்த 10தேவைகள் கையளிப்பதற்கு கலந்துறையாடப்பட்டு அவைகள் உள்ளடக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. கல்வி, இளைஞா், தேசிய ஒருமைப்பாடு, தொழில் மற்றும் அரசியல் யாப்பு மொழி மத வழிபாடுகள் பற்றிய தலைப்புக்களில் குழுக்களாக பிரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந் நிகழ்வு முஸ்லிம் லீக் வாலிப முன்னணனிய் எம். பாருக் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவா்களான இம்தியாஸ் பாக்கீா மாா்காா், என்.எம். அமீன் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் உபதலைவா் எம் லுக்மான் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.
அத்துடன் காலம் சென்ற ஏ.எச்.எம் அஸ்வா் அவர்களது காலமாகி 2 வருடங்கள் இன்றாகும் அன்னாருக்காக துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.