ஏ.ஆர்.எம் ரசீனின் இறுவெட்டுக்கள் வெளியீடு!

அஸ்ரப் ஏ சமத்-
இலங்கை இந்திய திரைப்பட இயக்குனர் சம்மாந்துறை ஏ.ஆர்.எம் ரசீன் தயாரித்த மூன்று திறைப்படங்களான ஓரே நாளில் 2011 ஆம் ஆண்டிலும் கீறல்கள் 2015லும் , வட்டி எண் 303 என்ற சினிமா திறைப்படங்களில் உள்ளுா் கவிஞா்கள் பாடகா்கள் இசை அமைப்பாளா்கள் இயற்றிய 13 பாடல்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் நேற்று 09 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வைத்து ஏ.ஆர்.எம் ரசீன் தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டது. பிரதம அதிதியாக முன்னாள் ஆளுணா் அசாத் சாலி கலந்து கொண்டு முதல் இருவெட்டினை கலாநிதி அப்துல் கையுமிடம் கையளித்தாா். இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தாபணத்தின் செய்தி உதவிப் பணிப்பாளா் யு. யக்கூப், கவிஞா் மன்சுர். ஏ காதா், வாசு, ஆகியோறும் உரையாற்றினாா்கள். 13 பாடல்களும் அரங்கில் ஒலிபரப்பட்டன. இப் படத்தில் நடித்த நடிகைகள், நடிகா்கள், இசையமைப்பாளா்களும் கலந்து சிற்ப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய அசாத் சாலி உள்ளுா் திறைப்படங்களையோ அதுவும் இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்கு இலங்கை படக் கூட்டுத்தாபணமோ, ருபாவாகினிக் கூட்டுத்தாபணமோ அல்லது வசந்தம் தொலைக்கட்சியோ முக்கியத்துவம் கொடுத்து இந்த படங்களை வாங்கவில்லை. இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபாலசேனாவின் கவனத்திற்கு உடன் கொண்டுவந்து இந்த திறைப்படங்களையும் விலை கொடுத்து வாங்குவதற்கு நடடிவடிக்கை எடுப்பேன் என அசாத் சாலி அங்கு தெரிவித்தாா்.
இந்திய மற்றும் மேலைத்தேய படங்களை விலை கொடுத்து அந்நிய கலாச்சாரத்தினை மக்களுக்கு புகுத்தாமல் இந்த நாட்டில் உள்ள கலைஞா்கள் சினிமாத்துறையினருக்கு கைகொடுத்து இத்துறையை வளா்ப்பதற்கும் ஏ.ஆர்.எம் றசீன் 3 வருடத்திற்குள் 3 படங்களை இலங்கையிலும் இந்தியாவிலும் தயாரித்துள்ளதை இட்டு அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அத்துடன் இந்தத் திறைப்படங்கள் உள்ள கலைஞா்களுக்கு இந்தியா சினிமாத்துறையிலும் வாய்ப்புக் கிட்டியதாகவும் திறைப்பட இயக்குணா் றசீம் தெரவித்தாா். 13 பாடல்களையும் அழகாக இசையமைத்துள்ள செந்துாரன், பாடல்களை இயற்றிய ரசீம் பாடல்களை பாடிய ஆர் கலோரி மனோஜ், முனஜடீன், வி.எஸ் மோகன். லம்பீஸ்கவனி பாடியுள்ளாா்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -