மன் . அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்திற்கான 20 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடிக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு





ன் \ அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்தில் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று(2019.09.10) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

மேலும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேச கல்விப் பணிப்பாளர் மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு செல்லத்தம்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாகாண பணிப்பாளர் முனவ்வர் அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் பாடசாலை நிருவாகம் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -