- முபாறக் அப்துல் மஜீத் உலமா கட்சித்தலைவர்.
மேட்படி மஹஜரில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின் முஸ்லிம் பெண்களின் ஆடையில் கட்டுப்பாட்டை ஜனாதிபதி ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு விட்டு பிரதமரை காப்பாற்றும் முயற்சி நடந்துள்ளதன் மூலம் மேற்படி அறிக்கையை ஆளும் கட்சிக்கு ஆதரவான ஒருவர் எழுதிக்கொடுத்ததை பேராசிரியர் ஜவாஹிருள்ளா கண்ணை மூடிக்கொண்டு ஒப்படைத்துள்ளதாகவே தெரிகிறது.
முஸ்லிம் பெண்களின் ஆடைக்கட்டுப்பாட்டை ஜனாதிபதி அவர்கள் அவசர கால சட்டத்திலேயே உள் வாங்கினார். இதனை உலமா கட்சி ஆதரிக்காத போதும் அந்த சூழலில் முஸ்லிம் சமூகம் பொறுத்துக்கொண்டது.
ஆனால் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவைதான் இந்த சட்டத்தை நிரந்தர தடையாக கொண்டு வர அனுமதியளித்துள்ளது என்பது எம் பியான ஜவாஹிருள்ளாவுக்கு தெரியாதா?
அத்துடன் மதுரசாக்கள், பள்ளிவாயல்கள், காதி நீதிமன்றம் போன்றவற்றுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடும் மேற்படி மகஜரில் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களிப்பர் என கூறியிருப்பது மிகப்பெரிய காட்டிக்கொடுப்பாகும்.
தற்போதைய ஆளும் ஐ தே க ஆட்சியில்தான் மதுரசாக்கள், பள்ளிவாயல்கள் என்பன மிக மோசமாக தாக்கப்பட்டன. காதி நீதிமன்றம் என்ற பெயரைக்கூட நீக்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். முஸ்லிம் அல்லாத சட்டத்தரணியும் காதி நீதிவானாக செயற்பட முடியும் என்ற முட்டாள்த்தனமான சட்டத்தை பிரதமரின் அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இப்படியெல்லாம் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யும் ஐ தே கவுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என எவ்வாறு கூற முடியும்? இவ்வாறெல்லாம் செய்த உங்கள் கட்சி உடனடியாக மேற்படி சட்டங்களை நீக்காவிட்டால் எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம்கள் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தால் அதில் அச்சமூட்டி எச்சரித்தல் இருந்திருக்கும்.
ஆக மொத்தத்தில் பேராசிரியர் ஜவாஹிருள்ளா அரசுடன் இருக்கும் முஸ்லிம் கட்சியினரின் கருத்தை மட்டும் உள்வாங்கி மேற்படி மகஜரை தயாரித்துள்ளார் அல்லது யாரோ எழுதியதை ஒப்புவித்துள்ளார். அரசுடன் இல்லாத உலமா கட்சி போன்ற முஸ்லிம் கட்சிகளையும் சந்தித்து தெளிவு பெற்றபின் மகஜர் எழுதியிருந்தால் அது இலங்கை முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்திருக்கும்.