சிறு வயதிலே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்த சாதனை வீரர் அஹமட் அனீகுக்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு


பழுலுல்லாஹ் பர்ஹான்-
விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த இளம் விளையாட்டு வீரர் எம்.எம்.அஹமட் அனீகுக்கு தனது பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.....
சிறு வயதிலே பெற்றோரையும் இழந்தது மட்டுமன்றி புற்று நோயால் தனது ஒரு காலையும் இழந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு 2019 தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டம்,200 மீற்றர் ஓட்டம்,நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து எம்.எம்.அஹமட் அனீக் தேசிய,சர்வதேச ரீதியில் இன்னும் பல சாதனைகளை நிலை நாட்ட வேண்டுமெனவும் அவரின் ஏதிர்கால வாழ்க்கைக்கு தன்னாள் முடியுமான உதவிகளை வழங்குவதாகவும் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -